எமனே எதிர்ல வந்தாலும் எதிர்த்து நிற்கும் வலிமை... டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களமிறங்கும் சீன கார்!

இந்தியாவின் பெரும் வணிக குழுமங்களுள் ஒன்று, புனேவை சேர்ந்த ஜே.எஸ்.டபிள்யூ (JSW) ஆகும். ஐபிஎல் கிரிக்கெட் (IPL Cricket) தொடரில் கூட ஒரு அணிக்கு ஸ்பான்சர் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதேநேரம், தனியாகவும் ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ் என்கிற பெயரில் செயல்பட தயாராகி வருகிறது.

ஆரம்பத்தில், தனது சொந்த முயற்சியில் வடிவமைக்கப்பட்ட கார்களை அறிமுகம் செய்யாமல், நேரடியாக சீனாவில் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் கார்களை ஜே.எஸ்.டபிள்யூ பிராண்டில் களமிறக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, சீனாவின் செரி (Chery) ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் கூட்டணி சேர்ந்துள்ளது. செரி நிறுவனத்தின் கீழ் பல பிராண்ட்கள் செயல்படுகின்றன.

jetour t2 5-star rating in asean ncap crash test

அவற்றுள் ஒன்றான ஜேடூர் (Jetour)-இன் டி2 (T2) வாகனம் ஆசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (Asean NCAP Crash Test)-இல் உட்படுத்தப்பட்டு சமீபத்தில் அதன் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து முதலாவதாக அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கார்களுள் ஒன்று இந்த ஜேடூர் டி2 ஆகும்.

இந்திய சந்தையில் வருகிற தீபாவளி (Diwali) பண்டிகை சமயத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஜேடூர் டி2 ஆசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திர மதிப்பீடுகளை பெற்றுள்ளது. பெட்ரோல், எலெக்ட்ரிக் என இரண்டிலும் இயங்கக்கூடிய பிளக்-இன் ஹைப்ரீட் (Plug-in Hybrid) காரான ஜேடூர் டி2 பெற்றுள்ள 5-ஸ்டார் ரேட்டிங் மூலம் இந்த வாகனத்தின் பாதுகாப்பு குறித்து நமக்கு ஒரு புரிதல் கிடைக்கிறது.

ஆசியன் கிராஷ் டெஸ்ட்டில் ஜேடூர் டி2 வாகனம் 100க்கு 86.50 மதிப்பெண்களை பெற்று 5-ஸ்டார் ரேட்டிங்கை சொந்தமாக்கி உள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் இந்த காருக்கு 37.17 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 15.94 மதிப்பெண்களையும், பாதுகாப்பு அம்சங்களுக்காக 17.14 மதிப்பெண்களையும், மோட்டார்சைக்கிள் ஓட்டிகளுக்கான பாதுகாப்புக்காக 16.25 மதிப்பெண்களையும் ஜேடூர் டி2 பெற்றுள்ளது.

toyota fortuner

இந்த ஜேடூர் கார் பார்ப்பதற்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் போன்று உள்ளது. விலையிலும் கிட்டத்தட்ட ஃபார்ச்சூனருக்கு இணையானதாக ரூ.30 லட்சம் அளவில் ஜேடூர் டி2 காரின் விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஃபார்ச்சூனர் காரும் பழைய ஆசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் சில வருடங்களுக்கு முன் உட்படுத்தப்பட்டது.

அப்போது, ஃபார்ச்சூனருக்கு பெரியவர்கள் பாதுகாப்பில் 36.3 மதிப்பெண்களும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 41.4 மதிப்பெண்களும், சாலையை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 48க்கு 42.2 மதிப்பெண்களும் வழங்கப்பட்டு, 5-ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டு இருந்தது. பழைய ஆசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் என்பதால், மதிப்பெண்களை வகுத்திருப்பது ஃபார்ச்சூனர் விஷயத்தில் வேறுப்பட்டதாக உள்ளது.

இந்தியா தனக்கான பாரத் என்சிஏபி (Bharat NCAP)-ஐ சில வருடங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தி விட்டது என்றாலும், இன்னும் டொயோட்டா ஃபார்ச்சூனர் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்படவில்லை. ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட உடன் ஜேடூர் டி2 கார் பாரத் என்சிஏபி-இல் உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சற்று விலையுயர்ந்த காராக இருப்பினும், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இத்தகைய காருக்கு போட்டியாக ஒரு காரை அறிமுகம் செய்து வெற்றிப் பெற வைப்பது சவாலான காரியம் ஆகும். இருப்பினும், சீனாவில் பிரபலமாக உள்ள ஜேடூர் டி2 காரும் ஆசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது கவனத்தை ஈர்க்கிறது.

Article Published On: Friday, May 8, 2026, 11:36 [IST]
English summary
Jetour t2 arriving in india soon has received 5 star rating in asean ncap crash test
மேலும்... #crash test #hybrid car #asian market
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+