355 எச்பி பவர், 90 கிமீ ரேஞ்ச்.. ஜேஎஸ்டபிள்யூவின் முதல் எஸ்யூவி அறிமுக தேதி வெளியானது!

இந்திய கார் சந்தையில் புதிய எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த ஜேஎஸ்டபிள்யூ (JSW) நிறுவனம் தயாராகி வருகிறது. JSW Combat என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி ரக கார் வரும் டிசம்பர் 4ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சக்திவாய்ந்த ஹைபிரிட் தொழில்நுட்பமும், ஆஃப்ரோடு அம்சங்களுடன் கம்பீரமான தோற்றமும் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.

கட்டுமானத் துறையில் பிரபலமான ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தற்போது ஆட்டோமொபைல் துறையிலம் பெரிய அளவிலான திட்டங்களுடன் கால் பதித்துள்ளது. ஏற்கனவே எம்ஜி மோட்டாருடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வரும் ஜேஎஸ்டபிள்யூ தற்போது சொந்த பிராண்டிலேயே கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

Jetour T2

ரீபேட்ஜ் மாடல்

சீனாவை சேர்ந்த செரி நிறுவனத்தின் கார்களை ரீபேட்ஜ் செய்து தனது பிராண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. சர்வதேச அளவில் விற்பனையாகும் செரி நிறுவனத்தின் Jetour T2 மாடலை அடிப்படையாக கொண்ட காம்பேட் என்ற மாடலை முதலாவதாக களமிறக்க ஆயத்தமாகி வருகிறது. இந்தியாவுக்கான பதிப்பில் சில வடிவமைப்பு மாற்றங்களும், ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் அடையாளங்களும் இடம்பெற உள்ளது.

Also Read

பவர்ஃபுல் ஹைபிரிட் மாடல்

இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் இரண்டு மின்சார மோட்டார்கள் இணைக்கப்பட உள்ளன. இவை இணைந்து அதிகபட்சமாக 355 எச்பி பவரையும், 610 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. முன்சக்கரங்களுக்கு எஞ்சின் சக்தியை கடத்தும் அமைப்புடன் இந்தக் கார் உருவாக்கப்படலாம்.

இதில் 3 ஸ்பீடு டெடிகேட்டட் ஹைபிரிட் டிரான்ஸ்மிஷன் (DHT) வழங்கப்பட வாய்ப்புள்ளது. பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்சார மோட்டார்களின் செயல்பாட்டை ஒருங்கிணைத்து ஆற்றலை வழங்குவது இதன் முக்கிய அம்சமாக இருக்கும். அதிக பவர் மட்டுமின்றி, எரிபொருள் பயன்பாட்டையும் சிறப்பாக வழங்கும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

90 கிமீ ரேஞ்ச்

இந்தக் காரில் 18.4 kWh பேட்டரி இடம்பெற உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்தாமல், பேட்டரி சார்ஜை பயன்படுத்தி 90 கிமீ வரை பயணிக்க முடியும் என NEDC சோதனைச் சுழற்சியின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில் மொத்தம் சுமார் 1,100 கிமீ பயணிக்கும் திறனை பெற்றிருக்கும்.

தொழில்நுட்ப வசதிகள்

புதிய ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் காரின் உட்புறத்தில் 15.6 அங்குல தொடுதிரை, 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இடம்பெறும். மேலும், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வசதிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. பெரிய திரைகள் மற்றும் நவீன இணைப்புத் தொழில்நுட்பங்கள் மூலம் பயணிகளுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் கேபின் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு மற்றும் ஓட்டுனர் உதவி வசதிகளிலும் குறைவிருக்காது. மேலும், 540 டிகிரி கேமரா, முன்பக்க இருக்கைகளுக்கான வென்டிலேட்டட் வசதி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் லெவல் 2 ADAS தொழில்நுட்பம் ஆகியவை எதிர்பார்க்கப்படும் அம்சங்களாக உள்ளன.

எப்போது அறிமுகம்?

மகாராஷ்டிர மாநிலம் சத்திரபதி சம்பாஜிநகரில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் மிகப்பெரிய முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்த ஆலையில்தான் இந்த புதிய மாடலின் அசெம்பிள் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்படும். வரும் டிசம்பர் 4ஆம் தேதி இந்த புதிய கார் இந்தியாவில் முறைப்படி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Source: Autocarindia

Article Published On: Friday, October 9, 2026, 16:53 [IST]
English summary
Jsw combat suv india unveil december 4 hybrid range specs
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out