ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் முதல் கார் டிசம்பர் 3ல் அறிமுகம்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய கார் தயாரிப்பு நிறுவனமாக களமிறங்குகிறது ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் (JSW Motors). ஏற்கனவே பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள ஜேஎஸ்டபிள்யூ குழுமம், தற்போது பயணிகள் கார் தயாரிப்பிலும் தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்ச்சி டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தனது புதிய கார் பிராண்டை அறிமுகப்படுத்துவதுடன், தனது முதல் தயாரிப்பையும் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்த உள்ளது. சீனாவின் செரி (Chery) நிறுவனத்துடனான கூட்டணி மூலம் புதிய கார்களை தனது பிராண்டில் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் வர்த்தகத்தை துவங்க உள்ளது. முதல் காராக ஜெடூர் டி2 (Jetour T2) அடிப்படையிலான எஸ்யூவி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

JSW Combat

ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் எஸ்யூவி

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் முதல் காருக்கு காம்பேட் (Combat) எனப் பெயரிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் ஜெடூர் டி2 என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவிற்கான மாடல் உருவாக்கப்படுகிறது. இந்திய சந்தைக்கு ஏற்றவாறு சில மாற்றங்களும் செய்யப்படலாம்.

இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு பெட்டி போன்ற தோற்றத்துடன் மிகவும் கம்பீரமாக இருக்கிறது. முன்பக்கத்தில் பெரிய கிரில், அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், தடிமனான பம்பர் ஆகியவை இடம்பெறுகின்றன. பக்கவாட்டில் சதுர வடிவ வீல் ஆர்ச்கள், பெரிய ஜன்னல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன.

பின்பக்கத்தில் செங்குத்தான டெயில்கேட், எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட ஸ்பேர் டயர் ஆகியவை இதன் ஆஃப்-ரோடு தோற்றத்தை வழங்குகின்றன. சர்வதேச மாடலானது 4,785 மிமீ நீளமும், 2,005 மிமீ அகலமும், 1,875 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இதன் வீல்பேஸ் 2,800 மிமீ நீளமாக உள்ளது.

Also Read

பிரீமியம் வசதிகளுடன் உட்புறம்

உட்புறத்தில் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 15.6 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், லெவல் 2 அடாஸ், ஆறு ஏர்பேக்குகள், டெர்ரெயின் மோடுகள் மற்றும் இருக்கைகளுக்கான வென்டிலேஷன் வசதிகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.

பிளக்-இன் ஹைபிரிட் தொழில்நுட்பம்

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் முதல் காரில் பிளக்-இன் ஹைபிரிட் (PHEV) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கும். 18.4 kWh முதல் 26.7 kWh வரையிலான பேட்டரி தேர்வுகள் சர்வதேச மாடல்களில் உள்ளன.

இதன் மூலம் பேட்டரி சார்ஜ் இருக்கும் வரை சுமார் 90 முதல் 100 கிமீ வரை மின்சாரத்தில் மட்டும் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் மின்சார ஆற்றலை இணைத்துப் பயன்படுத்தும்போது சுமார் 1,100 கி.மீ வரை மொத்த பயண தூரம் கிடைக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read

விலை எவ்வளவு இருக்கும்?

இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் எஸ்யூவியின் விலை ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையிலான விலையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள தொழிற்சாலையில் இந்த காரை அசெம்பிள் செய்ய ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்த முடியும்.

டிசம்பர் 3ஆம் தேதி புதிய பிராண்ட் மற்றும் முதல் காரின் அறிமுகம் நடைபெறவுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி வரும் 2027ஆம் ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் தொடங்கப்படும். இதற்காக நாடு முழுவதும் டீலர்ஷிப் கட்டமைப்பை உருவாக்கும் பணிகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Article Published On: Saturday, November 14, 2026, 9:12 [IST]
English summary
Jsw first car launch india december 3 combat phev suv
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out