மக்கள் யாரும் காரே வாங்க கூடாதுனு முடிவு பண்ணிட்டாங்களா! இந்த வருடத்திலேயே இது 2வது தடவை!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம் அதன் கார்களின் விலைகளை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி அதிகரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் எம்ஜி கார்கள் அனைத்திலும் கொண்டுவரப்பட உள்ள இந்த விலை உயர்வு எந்த அளவிற்கு இருக்க உள்ளது என்பதையும், இதனால் எம்ஜி கார்களின் விலைகள் எந்த அளவிற்கு உயர உள்ளன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

இந்திய கார்கள் சந்தையில் கடந்த சில வருடங்களில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ள கார் நிறுவனமாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் உள்ளது. குறிப்பாக, ஜேஎஸ்டபிள்யூ உடன் எம்ஜி மோட்டார் கூட்டணி சேர்ந்த பின், எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்த பிறகு எம்ஜி பிராண்டின் ரேஞ்ச் எங்கேயோ சென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

jsw mg motor cars price hike

இருப்பினும், தொடர்ந்து அதிகரித்து வரும் கார் பாகங்களை உற்பத்தி செய்வதற்கான செலவையும், போக்குவரத்து செலவையும் கருத்தில் கொண்டு கார்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் மற்ற கார் நிறுவனங்களை போன்று எம்ஜி நிறுவனத்திற்கும் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் கொண்டுவரப்படும் விலை உயர்வுக்கு ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனமும் இதே காரணத்தை தான் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் எம்ஜி கார்களின் விலைகள் அவற்றின் தற்போதைய விலைகளில் இருந்து 2% உயர்த்தப்பட உள்ளன. இந்தியாவில் தற்போதைக்கு மொத்தம் 9 கார் மாடல்களை எம்ஜி மோட்டார் விற்பனை செய்கிறது. இதில், 5 எலெக்ட்ரிக் கார்களும், 4 பெட்ரோல்/ டீசல் என்ஜின் கார்களும் அடங்குகின்றன.

jsw mg motor cars price hike

இவற்றில் விலை குறைவான எம்ஜி காராக கோமெட் இவி (Comet EV) என்கிற எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.7.50 லட்சத்தில் இருந்து ரூ.9.56 லட்சம் வரையில் இருக்கும் நிலையில், ஏப்ரல் முதல் 2% விலை அதிகரிப்பின்படி, இதன் விலைகள் ரூ.15,000 முதல் ரூ.19,000 வரையில் உயர்த்தப்பட உள்ளன.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் ஆக விளங்கும் எம்ஜி விண்ட்சர் இவி (Windsor EV) தற்சமயம் ரூ.14 லட்சம் முதல் ரூ.18.50 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் விலைகள் ரூ.28,000 முதல் ரூ.37,000 வரை உயர்த்தப்பட உள்ளன. எம்ஜி பிராண்டில் இருந்து இந்தியாவில் அதிக விலையில் சைபர்ஸ்டர் இவி (Cyberster EV) என்கிற எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.75 லட்சமாக தற்சமயம் உள்ளது. இதேபோன்று, எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் காரும் ரூ.70.90 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் முதல் மற்ற எம்ஜி கார்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டாலும், இந்த இரு விலையுயர்ந்த எலெக்ட்ரிக் கார்களின் விலைகள் அதிகரிக்கப்படாது என்றே கூறப்படுகிறது.

இந்த இரு கார்களும் எம்ஜி செலக்ட் (MG SELECT) என்கிற பிரத்யேக டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக வருகிற ஏப்ரல் மாதத்தில் எம்ஜி மெஜஸ்டர் (Majestor) காரும், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹெக்டர் (Hector) காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்சனும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து கடைசியாக கடந்த ஜனவரி மாதத்திலும் விலை அதிகரிப்பு கொண்டுவரப்பட்டது. அந்த சமயத்தில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து எம்ஜி கார்களின் விலைகளும் உயர்த்தப்படாத நிலையில், ஏப்ரலில் விலையுயர்ந்த சைபர்ஸ்டர் இவி மற்றும் எம்9 எலெக்ட்ரிக் கார்களை தவிர்த்து மற்றவை அனைத்தின் விலைகளும் உயர்த்தப்பட உள்ளன. கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டாலும், அதனை சமாளிக்கும் வகையில் சலுகைகளை எம்ஜி அறிவிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 30, 2026, 16:06 [IST]
English summary
Jsw mg motor announces cars price hike from april 1 check all details here
மேலும்... #mg motor #car price hike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+