சீனாவில் கொடிக்கட்டி பறக்கும் கார்... சைலண்ட்டாக இந்தியாவிற்கு கொண்டுவரும் எம்ஜி!

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம் தனது முதல் பிளக்-இன் ஹைப்ரிட் எலக்ட்ரிக் காரை (PHEV) இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. MG-இன் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி (SUV) கார், சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான 'வுலிங் ஸ்டார்லைட் எஸ்' (Wuling Starlight S) காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வுலிங் நிறுவனத்தின் மைக்ரோ காரை 'கோமட் இவி' (Comet EV) என்கிற பெயரில் இந்தியாவில் வெற்றிகரமாக MG விற்பனை செய்து வரும் நிலையில், இந்த புதிய பிரம்மாண்டமான SUV காரையும் அதே பாணியில் கொண்டுவர MG திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், JSW MG மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டீசர் (Teaser) ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உலகையும் உற்றுநோக்க வைத்துள்ளது.

jsw mg motor s first plug-in hybrid electric car

"இணைய தொழில்நுட்பங்கள் இந்தியர்களின் டிரைவிங் அனுபவத்தையே மாற்றியமைத்தன. இப்போது, அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கான நேரம் வந்துவிட்டது. புதிய ஆற்றல் வாகனங்கள் (New Energy Vehicles) குறித்த இந்தியாவின் சிந்தனையை நாங்கள் எவ்வாறு மறுவரையறை செய்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்" என்று JSW MG மோட்டார் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இந்திய கார்கள் சந்தையில் MG கொண்டு வரப்போகும் புதிய எனர்ஜி வாகன புரட்சிக்கான ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. MG-இன் இந்த புதிய ஆற்றல் வாகனம் (NEV) ஆனது முழு எலெக்ட்ரிக் அல்லது பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி காராக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. MG நிறுவனம் இந்த காரை கடந்த சில மாதங்களாகவே இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்து வருகிறது.

jsw mg motor s first plug-in hybrid electric car

இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் PHEV எனப்படும் பிளக்-இன் ஹைப்ரிட் கார்கள் மிகவும் குறைவே. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு PHEV காராக மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ் 450இ விற்பனை செய்யப்படுகிறது. BYD நிறுவனத்தில் இருந்து சீல் U DM-i என்கிற PHEV கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இருப்பினும், இவை இரண்டுமே விலையுயர்ந்த கார்களாகும்.

ஆதலால், பட்ஜெட் விலையில் இந்தியாவின் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் காராக இந்த புதிய MG கார் இருக்கும் என்று தெரிகிறது. மேலும், குடும்ப வாடிக்கையாளர்களையும், பிரீமியம் தரத்திலான எஸ்யூவி கார் விரும்பிகளையும் ஈர்க்கும் வகையில், மூன்று வரிசைகளில் இருக்கைகளை கொண்ட மாடலாக இது களமிறக்கப்பட உள்ளது என்பது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் வுலிங் ஸ்டார்லைட் எஸ் கார், EV மற்றும் PHEV ஆகிய இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. இதன் EV மாடலில் 56.7 kWh பேட்டரி பேக், முன் சக்கர இயக்கம் (Front-Wheel-Drive) கொண்ட எலெக்ட்ரிக் மோட்டருடன் இணைக்கப்பட்டு, சிங்கிள்-முழு சார்ஜில் 500 கிமீ தூரம் வரை இயங்கும் ஆற்றலை அளிக்கிறது.

அதே நேரத்தில், இதன் பிளக்-இன் ஹைப்ரிட் கார் மாடலில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் கூடிய எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இது 197 hp பவரையும், 230 Nm டார்க் திறனையும் வாரி வழங்குகிறது. இந்த காரின் பேட்டரி ஆற்றலை மட்டும் கொண்டு 100 கிமீ தூரம் வரை எலெக்ட்ரிக் மோடில் பயணிக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் MG நிறுவனத்தின் அடுத்த கட்ட எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார் யுக்தியின் புதிய தொடக்கமாக இந்த PHEV கார் அமையவுள்ளது. பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் தொழில்நுட்பம் இணையும் போது, காரின் ஒட்டுமொத்த மைலேஜ் வியக்க வைக்கும் வகையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சீனாவில் இருந்து சிடிகே (CKD - Completely Knocked Down) முறையில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் உள்ள MG ஆலையில் இந்த கார் அசெம்பிள் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Article Published On: Thursday, June 25, 2026, 6:15 [IST]
English summary
Jsw mg motor gearing up to launch first plug in hybrid electric car in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out