போன ஜூன் மாதத்திலேயே இந்த காரை வாங்கியவர்கள் புண்ணியம் பண்ணவங்க! இப்போதும் வாங்கலாம், ஆனால்...
இந்திய எலெக்ட்ரிக் வாகன (EV) சந்தையைத் தன் வசம் ஈர்த்துக் கொண்டிருக்கும் எம்ஜி விண்ட்சர் (MG Windsor) ஆனது இந்திய எலக்ட்ரிக் வாகன உலகிற்குப் பெரும் புயலைக் கிளப்பி அசாத்திய கார் ஆகும். கடந்த ஆண்டில் வெறும் 14 மாதங்களில் 50,000-க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை மைல்கல்லை எட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய இந்த எலெக்ட்ரிக் கார், JSW MG நிறுவனத்தின் ஒட்டுமொத்த எலக்ட்ரிக் கார் விற்பனையில் 75%-க்கும் அதிகமாகப் பங்களித்து, நிறுவனத்தின் பெரும் தூணாக விளங்கி வருகிறது.
எம்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் கோமெட் EV, ZS EV, சைபர்ஸ்டர் மற்றும் M9 போன்ற எலெக்ட்ரிக் கார்கள் இருந்தாலும், விற்பனையில் முன்னணியில் இருப்பது விண்ட்சர் EV தான். 2026 மே மாதத்தில் நாட்டின் நான்காவது அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் காராக இது சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பெரும் வரவேற்பை பெற்ற இந்த எலெக்ட்ரிக் காரின் விலை தற்போது சற்று உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 2026 ஜூலை முதல் தனது கவர்ச்சிகரமான விண்ட்சர் EV காரின் விலையை உயர்த்தி உள்ளது எம்ஜி நிறுவனம்.
கியா மற்றும் டொயோட்டா போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களைத் தொடர்ந்து, எம்ஜி நிறுவனமும் விண்ட்சர் காரின் விலையை சுமார் 40,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் விண்ட்சர் காரின் விலை சுமார் 2.15% முதல் 4.26% வரை அதிகரித்துள்ளது. வியக்க வைக்கும் இந்த காரின் தற்போதைய புதிய விலைப் பட்டியலை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.
| வேரியண்ட் (Variant) | பழைய விலை (Old Price) | புதிய விலை (New Price) | விலை உயர்வு (Price Hike) |
| Excite (பேஸ் வேரியண்ட்) | ரூ. 14.10 லட்சம் | ரூ. 14.70 லட்சம் | ரூ. 60,000 |
| Exclusive | ரூ. 15.531 லட்சம் | ரூ. 16.00 லட்சம் | ரூ. 46,900 |
| Essence | ரூ. 16.531 லட்சம் | ரூ. 17.00 லட்சம் | ரூ. 46,900 |
| Exclusive Pro | ரூ. 17.38 லட்சம் | ரூ. 17.90 லட்சம் | ரூ. 52,000 |
| Essence Pro (டாப் வேரியண்ட்) | ரூ. 18.60 லட்சம் | ரூ. 19.00 லட்சம் | ரூ. 40,000 |
எம்ஜி விண்ட்சர் காரில் அப்படி என்ன சிறப்புகள் இருக்கின்றன என்று யோசிக்கிறீர்களா? இதன் பேட்டரி மற்றும் மைலேஜ் விவரங்கள் உங்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். விண்ட்சர் EV எலெக்ட்ரிக் காரானது இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது. எக்சைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் ஆகிய வேரியண்ட்கள் 38 kWh பேட்டரி பேக் உடன் கிடைக்கின்றன.
இவை ஒருமுறை சார்ஜ் செய்தால் 332 கிமீ தூரம் வரை பயணிக்கக்கூடியவை. அதே சமயம், எக்ஸ்க்ளூசிவ் புரோ மற்றும் எசென்ஸ் புரோ போன்ற உயர்தர வேரியண்ட்கள் பெரிய 52.9 kWh பேட்டரி பேக் மூலம் 449 கிமீ என்ற அசத்தலான ரேஞ்சை வழங்குகின்றன. இந்த காரின் அனைத்து வேரியண்ட்களும் 136 PS பவரையும், 200 Nm டார்க் திறனையும் வாரி வழங்குகின்றன.

மேலும், இந்த காரின் சார்ஜிங் வேகமும் அசத்தலானதாக உள்ளது. சிறிய பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட்கள் 45 kW பாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 45 நிமிடங்களில் 20% முதல் 80% வரை சார்ஜ் ஆகிவிடும். பெரிய பேட்டரி வேரியண்ட்கள் 60 kW வேகத்தில் சார்ஜ் ஆகி, வெறும் 50 நிமிடங்களில் அதே இலக்கை எட்டிவிடும். வேகமான உலகிற்கு ஏற்ப அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் இது ஆகும்.
எம்ஜி விண்ட்சர் காரின் உள்ளே நுழைந்ததும் உங்களை ஈர்க்கும் வகையில் மிக பிரம்மாண்டமான 15.6 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மனதை மயக்கும் கண்ணாடி மேற்கூரை (Glass Roof) இதில் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், பிற வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில் 'வெஹிக்கிள் டு லோடு' (V2L) மற்றும் 'வெஹிக்கிள் டு வெஹிக்கிள்' (V2V) தொழில்நுட்பங்களும் இதில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு சீன எலெக்ட்ரிக் கார்களுக்கே சாவல்விடும் எம்ஜி விண்ட்சர் EV -இன் விலை சற்று அதிகரித்தாலும், இந்த எலக்ட்ரிக் சூப்பர் ஸ்டார் கார் தனது ஈர்க்கும் குணங்களால் தொடர்ந்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுத்து கார்ப்பரேட் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறது.


Click it and Unblock the Notifications