ஒருத்தரும் வாங்காததால் நிறுத்தப்படும் எம்ஜி கார்... 2020இல் எவ்வளவு கனவோட இந்தியாவுக்கு வந்துச்சு!!

எம்ஜி மோட்டார் இந்தியா (MG Motor India) நிறுவனம் தனது பிரீமியம் எஸ்யூவி கார்கள் (SUV Cars) பிரிவை புதிய எம்ஜி மெஜஸ்டர் (Majestor) கார் மாடலுடன் விரிவுபடுத்தியுள்ளது. இந்த விலையுயர்ந்த எஸ்யூவி காரின் வருகையால், 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனையில் இருக்கும் க்ளோஸ்டர் (Gloster) எஸ்யூவி கார் மாடல் படிப்படியாக நிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், ஒரே பிரிவில் இரண்டு எஸ்யூவி கார்கள் இருப்பது எம்ஜிக்கு வியாபார யுக்தி ரீதியாக நிலைத்தன்மை அற்றதாக இருக்கலாம். மேலும் மெஜஸ்டர், க்ளோஸ்டரின் விற்பனையை பாதிக்கலாம் என்பதே இதற்குக் காரணம். க்ளோஸ்டர் எஸ்யூவி இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் ஃபோர்டு எண்டெவர் (Ford Endeavour) போன்ற கார் மாடல்களுக்குப் போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது.

jsw mg motor india planning to stop gloster suv car

அதன் வலுவான சாலை இருப்பு, நவீன கால வசதிகள் நிறைந்த கேபின் மற்றும் போட்டி விலையால் ஆரம்ப காலகட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தேவை அதிகரிப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பிளாக்ஸ்டார் (Blackstar) போன்ற சிறப்புப் பதிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், க்ளோஸ்டரின் விற்பனை காலப்போக்கில் சரிய துவங்கியது.

பிரீமியம் எஸ்யூவி கார்கள் பிரிவில் தனது நிலையை மேலும் வலுப்படுத்த, எம்ஜி மெஜஸ்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது க்ளோஸ்டர் உடன் அதன் முக்கிய பவர்டிரெய்னைப் பகிர்ந்துகொண்டாலும், புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, மேம்பட்ட ஸ்டைல், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆஃப்-ரோடு திறன்களுடன் வருகிறது.

jsw mg motor india planning to stop gloster suv car

மெஜஸ்டர் எஸ்யூவி காரின் முக்கிய சிறப்பம்சங்களில் 10 ஆஃப்-ரோடு டிரைவிங் மோட்கள், மூன்று டிஃபெரன்ஷியல் லாக்குகள், க்ரால் மோட் மற்றும் 810மிமீ ஆழ நீரையும் கடக்கும் திறன் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் மேட்ரிக்ஸ் கிரில், உறுதியான அண்டர்பாடி கிளாடிங், உயர் இழுவிசை கொண்ட லேடர்-பிரேம் சேசிஸ் மற்றும் 4x2, 4x4 அமைப்புகள் போன்றவையும் இதன் தனித்துவமான அம்சங்களாகும்.

கேபின் உள்ளே, பவர் மற்றும் வென்டிலேட்டட் வசதி கொண்ட முன் இருக்கைகள், 75+ இணைக்கப்பட்ட அம்சங்களுடன் கூடிய ஐ-ஸ்மார்ட் 2.0 (iSmart 2.0) இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற பல நவீன வசதிகள் உள்ளன. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலுடன் கூடிய லெவல்-2 அடாஸ் (ADAS), 360-டிகிரி கேமரா சிஸ்டம், இரட்டை வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் மின்சாரம் மூலம் அட்ஜஸ் செய்யக்கூடிய காரின் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்களாகும்.

மெஜஸ்டரின் உற்பத்தித் திறனை மாதத்திற்கு சுமார் 1,000 யூனிட்டுகளாக அதிகரிக்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எம்ஜியின் இந்திய கார்கள் வரிசையில் க்ளோஸ்டரின் அடுத்த தலைமுறை மாடலாக நிலைநிறுத்தப்படும்.

ஃபார்ச்சூனரைத் தவிர, புதிய எம்ஜி மெஜஸ்டர் எஸ்யூவி ஆனது ஜீப் மெரிடியன் (Jeep Meridian), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டைரோன் ஆர்-லைன் (Volkswagen Tayron R-Line) போன்ற பிற பிரீமியம் எஸ்யூவி கார் மாடல்களுக்கும் சவாலாக அமையும். இது பிரீமியம் லேடர்-ஃபிரேம் எஸ்யூவி கார்கள் பிரிவில் எம்ஜியின் இருப்பை கணிசமாக வலுப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி மெஜெஸ்டர் ஆனது அளவில் பெரியதான ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். பெரிய அளவிலான எஸ்யூவி காரை வாங்க விரும்புபவர்களுக்கு மெஜெஸ்டர் ஏற்றதாக இருக்கும். முன்னதாக, இந்த இடத்தை க்ளோஸ்டர் கவனித்து வந்தது. அந்த பணியை இனி மெஜெஸ்டர் கவனிக்க உள்ளது. இது, க்ளோஸ்டரை வாங்க திட்டமிட்டு வந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 17, 2026, 21:39 [IST]
English summary
Jsw mg motor india planning to stop gloster suv car after launch of new majestor
மேலும்... #mg motor #mg gloster #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+