டாடா, மஹிந்திராவுக்கு டஃப் கொடுக்கும் எம்ஜி! 10 லட்ச ரூபாய் பட்ஜெட் எலெக்ட்ரிக் கார் தான் காரணம்!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் நடந்து முடிந்த 2026 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனையில் 3% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மே மாதத்தில் புதியதாக மெஜஸ்டர் (Majestor) எஸ்யூவி காரை இந்த நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக விற்பனையில் இந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பிரிட்டிஷ் நாட்டில் தோன்றி, பின்னர் சீனாவின் SAIC-இன் கீழ் செயல்பட துவங்கிய நிறுவனம், எம்ஜி மோட்டார் ஆகும். அதன்பின் இந்தியாவின் ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்துடன் இணைந்ததன் மூலமாக ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் என்றாகியது. உண்மையில், 2023ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்த கூட்டணிக்கு பிறகே எம்ஜி கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிக்க துவங்கியது என்று சொல்ல வேண்டும்.

jsw mg motor car sales in april 2026

முக்கியமாக, எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் கூடுதல் கவனம் செலுத்தியது. அதன்படி, BaaS ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்ட விண்ட்சர் இவி (Windsor EV) தற்சமயம் இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் எலெக்ட்ரிக் காராக விளங்குகிறது. இதன் மூலமாக, இந்த நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கைகளும் அதிகமாக பதிவாகி வருகின்றன.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஏப்ரல் மாதத்தில் எம்ஜி நிறுவனம் கண்டுள்ள 3% விற்பனை வளர்ச்சி ஆனது அதற்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவே ஆகும். ஏனெனில், அந்த மாதங்களில் இதனை காட்டிலும் அதிகப்படியான வளர்ச்சியை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் பதிவு செய்துவந்தது.

jsw mg motor car sales in april 2026

கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தமாக 6 ஆயிரத்து 18 எம்ஜி கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், பெட்ரோல்/ டீசல் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் என அனைத்து விதமான எம்ஜி கார்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. 6,018 என்பது 2025 ஏப்ரல் மாதத்தில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்த கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 3% அதிகமாகும்.

ஏனெனில், கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5 ஆயிரத்து 829 கார்களை மட்டுமே இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இருப்பினும், இந்த 5,829 எண்ணிக்கை என்பதும் கூட அதற்கு முந்தைய 2024 ஏப்ரல் (4,725 கார்கள் விற்பனை) மாதத்தை காட்டிலும் 23% அதிகமாகும்.

இவ்வாறு, வருடத்திற்கு வருடம் இந்தியாவில் எம்ஜி கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்ற சூழல்களினால் கார்களை உற்பத்தி செய்வதற்கான பாகங்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ள போதிலும், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் கார்கள் விற்பனையில் இந்த 3% வளர்ச்சியை கண்டுள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்தியாவில் இந்த மே மாதத்தில் மெஜஸ்டர் என்கிற ஃபுல்-சைஸ் எஸ்யூவி (Full-size SUV) கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ரூ.41,000 என்கிற முன்தொகை உடன் மெஜஸ்டர் காருக்கான முன்பதிவுகளும் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி மெஜஸ்டர் ஆனது அளவில் பெரியதான எஸ்யூவி கார் என்பதால், பொருளாதார காரணங்களால் அதனை நிறைய பேரால் வாங்க முடியாது என்றாலும், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார்கள் விற்பனை இந்தியாவில் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். 3% அளவிற்கு இல்லாமல், அதனை காட்டிலும் அதிகப்படியான வளர்ச்சியை இந்த நிறுவனம் பதிவு செய்யும்.

Article Published On: Saturday, May 2, 2026, 10:51 [IST]
English summary
Jsw mg motor india registers 3 per cent year on year growth in april 2026 check all details here
மேலும்... #mg motor #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+