திரும்பும் பக்கம் எல்லாம் இவி சார்ஜிங் மையங்கள்! இந்த கம்பெனி எலெக்ட்ரிக் கார்களை தைரியமாக வாங்கலாம்!

JSW MG மோட்டார் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மொத்தம் 1,000 சார்ஜர்களை நிறுவி இருப்பதாக அறிவித்துள்ளது. MG எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த மைல்கல் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக JSW MG மோட்டார் உள்ளது. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் விண்ட்சர் இவி மற்றும் கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

jsw mg motor ev chargers in india

இவ்வாறு தனது எலெக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கேற்ப கார்களை சார்ஜ் செய்வதற்கான இவி சார்ஜர்களையும் MG நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிறுவி வருகிறது. இவ்வாறு நிறுவப்பட்டு வரும் இவி சார்ஜர்களின் எண்ணிக்கையில் தான் தற்போது 1,000 என்கிற மைல்கல்லை MG கடந்துள்ளது.

இந்தியா முழுவதும் 470க்கும் அதிகமான நகரங்களில் இந்த 1,000 MG இவி சார்ஜர்கள் நிறுவப்பட்டுள்ளன. MG நிறுவனத்தின் 'MG சார்ஜ்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த 1,000 இவி சார்ஜர்கள் இந்தியாவில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள், மருத்துவமனைகள், அலுவலக வளாகங்கள், விடுதிகள் மற்றும் தொழிற்பூங்காக்களில் நிறுவப்பட்டுள்ளன.

jsw mg motor ev chargers in india

இவி சார்ஜர்களை நிறுவுவதில் 1,000 என்கிற மைல்கல் எண்ணிக்கையை கடந்திருப்பதை தெரிவித்து இருப்பதுடன், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒட்டுமொத்தமாக இதுவரையில் சுமார் 290 கோடி கிமீ தொலைவிற்கு இயக்கப்பட்டு உள்ளதாகவும் JSW MG மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, ஏறக்குறைய 4.17 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

இதை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக, நடப்பு 2026ஆம் ஆண்டு முடிவதற்குள் மூன்று புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய MG நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் MG கார்களில் முதல்முறையாக பிளக்-இன் ஹைப்ரீட் தொழிற்நுட்பமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறான தொழிற்நுட்பங்கள் மூலமாக பசுமையான சுற்றுச்சூழலை காப்பதுடன், தொழிற்சாலை உற்பத்தி பணிகளிலும் மாசற்ற செயல்முறையை பின்பற்றுவதாக MG தெரிவித்துள்ளது.

குஜராத்தின் ஹலோல் பகுதியில் உள்ள MG நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஆனது கிட்டத்தட்ட 78% புதுப்பிக்கத்தக்க ஆற்றலினால் இயங்குகிறது. இதன் மூலமாக, 9,300 மெட்ரிக் டன் அளவிலான கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வு தடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த MG தொழிற்சாலையை இயங்க வைக்க தேவைப்படும் மின்சாரத்தில் 95% மின்சாரம் ஆனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து பெறப்படுகின்றன.

இதுமட்டுமின்றி, MG நிறுவனம் தனது தொழிற்சாலை பணிகளை மாற்றிக் கொண்டதன் மூலமாகவும், மறுசுழற்சி முறையில் நீரை மீண்டும் பயன்படுத்துவதன் மூலமாகவும் தொழிற்சாலைக்கு தேவையான நீரின் அளவை முன்பை விட 23% குறைத்துக் கொண்டுள்ளது. மேலும், நிலத்தில் எந்தவொரு குப்பையையும் வீணாக கொட்டாத தொழிற்சாலை ஆகவும் MG நிறுவனத்தின் தொழிற்சாலை சான்றளிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட் பெரியதாகி வருவதற்கு ஏற்ப, MG நிறுவனத்தின் மார்க்கெட்டும் தொடர்ந்து பெரியதாகி வருகிறது. குறுகிய காலத்தில் 1,000 MG இவி சார்ஜர்கள் நிறுவப்பட்டு இருப்பதுதான் அதற்கு சாட்சியாகும். அதேநேரம், சுற்றுப்புற சூழலிலும் JSW MG நிறுவனம் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது ஆகும்.

Article Published On: Friday, June 5, 2026, 18:26 [IST]
English summary
Jsw mg motor marks a historic first by setting up 1000 ev chargers in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out