வர்ற 1ம் தேதி காலைல விடிஞ்சதும் மக்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கு! யார் நெனச்சாலும் இதை தடுக்க முடியாது!
இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price) வெகுவாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால், மளிகை சாமான்கள் மற்றும் காய்கறி என்று அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விடும். இதற்கு கார்களும் (Cars) விதிவிலக்கு கிடையாது.
ஆம், இந்தியாவில் தற்போது கார்களின் விலையும் உயர தொடங்கியுள்ளது. ஏராளமான நிறுவனங்கள் தற்போது கார்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இதில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் ஒன்றாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விலை வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து 1.5 சதவீதம் வரை உயரவுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்கள் மட்டுமின்றி, வர்த்தக வாகனங்களின் விலையும், வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து 2.5 சதவீதம் வரை உயரவுள்ளது என்பது கூடுதல் தகவல். இந்த வரிசையில் கியா (Kia) நிறுவன கார்களின் விலையும் வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து 2 சதவீதம் வரை உயரவுள்ளது.
இதுமட்டுமின்றி பிஎம்டபிள்யூ (BMW) குழுமத்தின் கார்களின் விலையும் வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து 2 சதவீதம் வரை உயரவுள்ளது. இந்த வரிசையில் வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து கார்களின் விலையை உயர்த்த போகும் நிறுவனங்களின் பட்டியலில் தற்போது மற்றொரு முன்னணி நிறுவனமும் இணைந்துள்ளது.

அது ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) ஆகும். ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவன கார்களின் விலை வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து 3 சதவீதம் வரை உயரவுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்து கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தற்போதைய நிலையில் 3 ஐசி இன்ஜின் கார்களையும், 5 எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்து வருகிறது. ஐசி இன்ஜின் லைன்அப்பில், அஸ்டர் (Astor), ஹெக்டர் (Hector) மற்றும் மெஜஸ்டர் (Majestor) ஆகிய கார்கள் உள்ளன.
அதே சமயம் எலெக்ட்ரிக் லைன்அப்படில் கோமெட் இவி (Comet EV), விண்ட்சர் இவி (Windsor EV), இஸட்எஸ் இவி (ZS EV), சைபர்ஸ்டர் (Cyberster) மற்றும் எம்9 (M9) ஆகியவை உள்ளன. மேற்கண்ட அனைத்து கார்களின் விலையும் வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து உயரவுள்ளது. விலை உயர்வு எவ்வளவு? என்பது கார் மற்றும் அதன் வேரியண்ட்டை பொறுத்து மாறுபடும். எனினும் அதிகபட்ச விலை உயர்வு 3 சதவீதமாக இருக்கும்.
உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால்தான் விலையை உயர்த்துவதாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், அதன் எம்9 எலெக்ட்ரிக் காரை, நடிகரும், இயக்குனருமான நடனப்புயல் பிரபு தேவா (Prabhu Deva) சமீபத்தில் வாங்கியுள்ளார்.
அத்துடன் மெஜஸ்டர் காரை, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற கார்களுக்கு எல்லாம் போட்டி மாடல் ஆகும். முன்பு விற்பனையில் இருந்து க்ளோஸ்ட்டர் (Gloster) காருக்கு பதிலாக மெஜஸ்டர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) கடந்த ஜூன் 1ம் தேதியில் இருந்து தனது கார்களின் விலையை 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதை தொடர்ந்து வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்தும் ஏராளமான நிறுவனங்களின் கார்களின் விலை உயரவுள்ளது.
இதனுடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வும் சேர்ந்து கொண்டுள்ளதால், இந்தியாவில் வரும் மாதங்களில் கார்களின் விற்பனை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கார்களின் விலை உயர்வு காரணமாக, புதிய வாகனங்களை வாங்கும் முடிவை மக்கள் சிறிது காலம் தள்ளி போடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications