டொயோட்டா ஃபார்ச்சூனரை எல்லாம் தொட்டு கூட பாக்க முடியாதுனு யாரு சொன்னா! ஒத்தைக்கு ஒத்தையா வந்த புது கார்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor). இதன் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் 6,048 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் 6,304 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 256 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 4.06 சதவீத வீழ்ச்சி ஆகும்.

MG Hector Facelift Side View

இருப்பினும் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் சிறிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6,018 கார்களை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த மே மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 6,048 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதாவது இம்முறை 30 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 0.50 சதவீத வளர்ச்சி ஆகும். இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் விற்பனையில், ஐசி இன்ஜின் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் என இரண்டுமே குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.

MG Majestor SUV

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor), எம்ஜி ஹெக்டர் (MG Hector) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) என மொத்தம் 3 ஐசி இன்ஜின் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், எம்ஜி மெஜஸ்டர் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும்.

ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 40.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதன் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவன கார்களிலேயே மிகவும் விலை உயர்ந்தது என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

எம்ஜி மெஜஸ்டர் வருவதற்கு முன்பாக எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) கார் விற்பனையில் இருந்தது. தற்போது அதன் விற்பனையை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் நிறுத்தி விட்டது. இதுதவிர எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV), எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) என 3 எலெக்ட்ரிக் கார்களையும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

அத்துடன் எம்ஜி செலக்ட் (MG Select) நெட்வொர்ட் மூலமாக எம்ஜி எம்9 (MG M9) மற்றும் எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster) ஆகிய பிரீமியம் எலெக்ட்ரிக் கார்களும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் மெஜஸ்டர் காரை தொடர்ந்து மேலும் 2 புதிய கார்களை கூடிய விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், ஐஎம்6 பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி (IM6 Premium Electric SUV) ஒன்றாகும். மற்றொன்று ப்ளக்-இன் ஹைப்ரிட் ரகத்தை சேர்ந்த எஸ்யூவி கார் ஆகும். இதன் மூலம் எதிர்காலத்தில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Saturday, June 13, 2026, 18:39 [IST]
English summary
Jsw mg motor sales report may 2026 4 per cent down 2 cars launch soon
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out