தார் ராக்ஸுக்கு போட்டி... இந்தியாவில் டிசைன் காப்புரிமை பெற்ற ஜேஎஸ்டபிள்யூ EV எஸ்யூவி

டாடா, மஹிந்திராவை போல வரவேண்டும் என்ற வேட்கையுடன் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிராண்டில் புதிய கார்களை விரைவில் களமிறக்க உள்ளது. அந்த வகையில், சீனாவின் ஜேடூர் டி2 அடிப்படையிலான ஹைப்ரிட் காரை விரைவில் கொண்டு வர இருக்கும் அந்நிறுவனம் தற்போது அடுத்து ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு இந்தியாவில் டிசைன் காப்புரிமையை பெற்றுள்ளது.

சீனாவைச் சேர்ந்த செரி நிறுவனத்தின் iCaur V23 காரின் அடிப்படையில் உருவாகும் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியின் டிசைனுக்கு இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இந்த வாகனம் இந்திய சாலைகளில் வைத்து சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது டிசைனுக்கு காப்புரிமை பெற்றது குறித்த தகவல் வெளியாகியிருப்பதால், இந்த கார் மிக விரைவில் இந்தியாவில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

JSW EV Patent

வெளிப்புற தோற்றம்

சீனாவில் விற்பனை செய்யப்படும் ஐகார் வி23 காரின் அடிப்படையில் பெட்டி போன்ற பாக்ஸி வடிவமைப்பை இந்திய மாடலும் தக்கவைத்துக் கொள்ளும். வட்ட வடிவ LED ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், உயரமான பானெட் மற்றும் தடிமனான வீல் ஆர்ச்சுகள் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.

அதே நேரத்தில், இந்தியாவுக்கான ஜேஎஸ்டபிள்யூ பிராண்டு மாடலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக முன்பக்க கிரில் பகுதி மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. புதிய அலாய் வீல் டிசைனும் இடம்பெறுகிறது. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஐகார் வி23 மாடலில் இல்லாத பனோரமிக் சன்ரூஃப் இந்திய மாடலின் பேட்டன்ட் படங்களில் காணப்படுகிறது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்டோரேஜ் பாக்ஸ் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது தெரிகிறது.

Also Read

உட்புற அம்சங்கள்

உலகளவில் விற்பனை செய்யப்படும் ஐகார் வி23 காரின் கேபின் மிகவும் எளிமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வழக்கமான தனி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்குப் பதிலாக 15.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ரோட்டரி கண்ட்ரோல்கள் மற்றும் 5 பேர் அமரும் வசதியுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மாடலிலும் இதே அடிப்படை கேபின் வடிவமைப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AWD மாடலுக்கு வாய்ப்பு

சீனாவில் ஐகார் வி23 எலெக்ட்ரிக் கார் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த காரின் 59.93kWh பேட்டரியுடன் கூடிய ரியர் வீல் டிரைவ் மாடல் அதிகபட்சமாக 134எச்பி பவரையும் 180என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொரு 81.76kWh பேட்டரியுடன் வரும் டூயல் மோட்டார் ஆல் வீல் டிரைவ் மாடலானது 208எச்பி பவரையும், 292என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்தியாவில் எந்த பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படும் என்று இதுவரை தகவல் இல்லை.

Also Read

அதேநேரத்தில், இந்தியாவில் இரண்டு மோட்டார்கள் கொண்ட ஆல் வீல் டிரைவ் மாடலை ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடல் ரூ.20 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது மேலும், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.

Article Published On: Thursday, September 17, 2026, 13:07 [IST]
English summary
Jsw motors chery icaur v23 based electric suv design patent india
மேலும்... #india #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out