தீபாவளி வர இருந்த JSW முதல் கார் அறிமுகம் சற்றே தள்ளிப்போகிறது... சீன உதிரிபாகங்கள்தான் காரணம்?

இந்திய கார் சந்தையில் புதிய நிறுவனமாக களமிறங்க தயாராகி வரும் ஜிண்டால் குழுமத்தின் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் காரை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சீனாவைச் சேர்ந்த செரி நிறுவனத்தின் Jetour T2 அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் முதல் காராக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. JSW Combat என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த புதிய ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் கார் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியீடு தாமதமாகியுள்ளது. தற்போது பிசினஸ்லைன் இதழ் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜேஎஸ்டபிள்யூ தனது முதல் எஸ்யூவி காரை வரும் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நிறுவனம் வெளியீட்டு தேதியை மாற்றியதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.

J Tour T2

இந்த தாமதத்திற்கு சீன உதிரிபாகங்களுக்கான உரிமம் மற்றும் அனுமதி தொடர்பான நடைமுறைகளில் ஏற்படும் தாமதம்தான் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. குறிப்பாக சீனாவைச் சேர்ந்த சில சப்ளையர்களிடமிருந்து பெறப்படும் முக்கிய உதிரிபாகங்களுக்கு இந்தியாவில் தேவையான அனுமதிகளைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதாக ஏற்கனவே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது.

Also Read

இந்த நிலையில், சீனாவில் இருந்து பெறப்படும் சில முக்கிய பாகங்களுக்கான இறக்குமதி அனுமதி நடைமுறைகளை விரைந்து செய்துகொடுக்குமாறு அரசிடம் ஜேஎஸ்டபிள்யூ கோரிக்கை வைத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதில் வாகனத்தின் பாதுகாப்பு கண்ணாடி, முன்பக்க கண்ணாடி மற்றும் சன்ரூஃப் போன்ற பாகங்களும் இடம்பெறுகின்றன. இந்தியாவின் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி வெளிநாட்டு உதிரிபாக உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட சான்றிதழ் நடைமுறைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.

சீனாவை தவிர்த்து வேறு சில நாடுகளில் இருந்து இந்த பாகங்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் நிறுவனம் பரிசீலித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனால் உற்பத்திச் செலவு அதிகரிக்கக்கூடும் என்பதால், நிறுவனத்தின் விலை நிர்ணயத் திட்டத்திலும் பிரச்னைகள் வரும் வாய்ப்பு இருந்ததால் அவை கைவிடப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் நிறுவனத்தின் முதல் எஸ்யூவியான காம்பேட் மிகவும் கட்டுமஸ்தான எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது சீனாவின் செரி நிறுவனத்தின் ஜே டூர் டி2 எஸ்யூவியின் அடிப்படையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. செரி மற்றும் ஜே டூர் டி2 பிராண்டு பெயர்களுக்கு பதிலாக ஜேஎஸ்டபிள்யூ பிராண்டு பெயர் மற்றும் சின்னங்கள் இடம்பெற்றிருக்கும்.

Also Read

எனினும், பெட்டி போன்ற தோற்றம், உயரமான உடல் அமைப்பு, பெரிய சக்கரங்கள் மற்றும் முரட்டுத்தனமான வடிவமைப்பு ஆகியவை இந்த எஸ்யூவியின் முக்கிய சிறப்புகளாக இருக்கும். இந்தியாவுக்கான மாடலில் முன்பக்க கிரில், விளக்குகள் மற்றும் பம்பர்களில் ஜேஎஸ்டபிள்யூ எஞ்சினியர்கள் சில சிறிய மாற்றங்களை செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும், இது பிளக் இன் ஹைப்ரிட் வகை மாடலாக வர இருக்கிறது. இந்த மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் பேட்டரி, மின் மோட்டார்கள் கொண்டதாக இருக்கும். இதுவரை இந்த மாடல் குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் நிறுவனம் முதல் கார் மாடலை பிரிமீயம் ரகத்தில் நிலைநிறுத்தும் விதமாக இந்த மாடலை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் இடையிலான சந்தையில் இந்த புதிய மாடலை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 5பேர் செல்வதற்கான இருக்கை வசதிகள் கொண்டதாக இருக்கும்.

வரும் டிசம்பரில் முதல் கார் மாடலை அறிமுகப்படுத்த உள்ள ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 15 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது. தனது சொந்த பிராண்டில் முதல் கார் மாடலை வெளியிட இருக்கும் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே எம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் கூட்டணியில் உள்ளது. அடுத்து ஃபோக்ஸ்வேகன்- ஸ்கோடா இந்தியா நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Businessline & Reuters

Article Published On: Thursday, September 24, 2026, 12:05 [IST]
English summary
Jsw motors first suv combat launch delayed december 2026 india
மேலும்... #china #chery motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out