பிரம்மாண்ட நிகழ்ச்சி! 50 ஆயிரம் கார்களை டெலிவரி செய்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மாருதி டீலர்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் கடந்த 2025-26 நிதியாண்டில் (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31) ஒட்டுமொத்தமாக 24,22,713 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஒரு நிதியாண்டில் இவ்வளவு அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த சாதனைக்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால் மிகவும் வலிமையான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்தான் மிகவும் முக்கியமான காரணம் ஆகும். இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சேல்ஸ் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் உள்ளன.

Indus Motor Event

இதில், ஒரு டீலர்ஷிப் தற்போது ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் இண்டுஸ் மோட்டார் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (Indus Motor Company Private Limited) ஆகும். கேரளா முழுவதும் இந்த நிறுவனத்திற்கு 100க்கும் மேற்பட்ட சேல்ஸ் அவுட்லெட்கள் உள்ளன. இதன் மூலம் இந்தியாவிலேயே மிகவும் பெரிய மாருதி சுஸுகி டீலர் நெட்வொர்க் என்ற பெருமையை இண்டுஸ் தன்வசம் வைத்துள்ளது.

இந்த சூழலில் கடந்த 2025-26 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 50,482 கார்களை இண்டுஸ் மோட்டார் கம்பெனி விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் ஒரு நிதியாண்டில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்த முதல் டீலர்ஷிப் என்ற பெருமையை இண்டுஸ் பெற்றுள்ளது.

Maruti Suzuki Car Showroom

அத்துடன் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர்-1 மாருதி சுஸுகி டீலர் என்ற பெருமையையும் இண்டுஸ் தக்க வைத்து கொண்டுள்ளது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இண்டுஸ் டீலர்ஷிப்பிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் 2வது பெரிய மாருதி சுஸுகி டீலர்ஷிப் என்ற பெருமையை பாப்புலர் கார்ஸ் (Popular Cars) பெற்றுள்ளது. அவர்கள் கடந்த 2025-26 நிதியாண்டில் 30,000 - 35,000 கார்களை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற வலிமையான டீலர்ஷிப் நெட்வொர்க் இருப்பதால்தான், மாருதி சுஸுகி நிறுவனத்தால் விற்பனையில் சாதனைகளை படைக்க முடிகிறது. கூடவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை பராமரிப்பதும் (Maintenance) மிகவும் எளிமையான விஷயமாக கருதப்படுகிறது. அத்துடன் அவை சிறப்பான மைலேஜையும் (Mileage) வழங்குகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்கிறது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தை இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாற்றியுள்ளன என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் வெற்றிக்கான காரணங்கள் என்ன? என்பது உங்களுக்கு தற்போது புரிந்திருக்கும். இருப்பினும் சந்தையில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கொள்ள ஏதுவாக மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

இந்த வரிசையில் கூடிய விரைவில் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி ரக கார் ஒன்றையும், 5 சீட்டர் மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஒன்றையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்ததை கொண்டாடும் விதமாக பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றையும் இண்டுஸ் நடத்தியது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 18, 2026, 12:57 [IST]
English summary
Kerala maruti suzuki dealer sold 50482 cars in financial year 2025 26 check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+