7 பேர் போற மாதிரி எலெக்ட்ரிக் கார்.. அடிமாட்டு விலையில களமிறக்கிய நிறுவனம்!
இந்தியாவில் தற்போது கேரன்ஸ் கிளாவிஸ் EV என்ற ஒரேயொரு மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே கியா இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. மூன்று வரிசைகளாக 6/7 சீட்கள் கொண்ட கார் மாடலாக இந்த கேரன்ஸ் கிளாவிஸ் EV இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கொஞ்சம் ப்ரீமியமாக 18 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையை இந்த எலெக்ட்ரிக் எம்பிவி கார் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த கேரன்ஸ் கிளாவிஸ் EV எம்பிவி காரை வாடிக்கையாளர்கள் வாங்குவதை எளிமையாக்கும் பொருட்டு இதற்கு BaaS (Battery as a Service) திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது கியா. BaaS என்பதை வாடகை பேட்டரி திட்டம் எனவும் கூறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் காரில் இருந்து பேட்டரிக்கான தொகை தனியே பிரிக்கப்பட்டுவிடும்.

பேட்டரி இல்லாமல், காருக்கான தொகையை மட்டும் முதலில் செலுத்தினால் போதும். இல்லையென்றால் பேட்டரி இல்லாமல் காருக்கு மட்டும் கூட வங்கி மூலம் கடனுதவி பெற்றுக் கொள்ளலாம். பேட்டரிக்கு ஒவ்வொரு மாதமும் பயன்பாட்டு அடிப்படையில் கட்டணம் செலுத்தினால் போதும். காரை வாங்கிவிட்டு பேட்டரியை வாடகை முறையில் பயன்படுத்துவது போலத் தான் இதுவும்.
எம்ஜி மோட்டார், டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸூகி உள்ளிட்ட பல்வேறு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் BaaS திட்டத்துடன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. கேரன்ஸ் கிளாவிஸ் EV-க்கு BaaS திட்டத்தை வழங்கியதன் மூலம் அந்த நிறுவனங்களின் வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது கியா.

கேரன்ஸ் கிளாவிஸ் EV-யில் 42 kWh (ஸ்டாண்டர்டு) மற்றும் 51.4 kWh (கூடுதல் ரேஞ்சு) என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளைக் கொடுத்துள்ளது கியா. இதில் ஸ்டாண்டர்டு ரேஞ்சு கொண்ட வேரியன்ட்களின் விலையானது 17.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், கூடுதல் ரேஞ்சு கொண்ட வேரியன்ட்களின் விலையானது 21.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் தொடங்குகிறது.
இதில் ஸ்டாண்டர்டு ரேஞ்சு கொண்ட வேரியன்டினை பேட்டரி இல்லாமல் 12.84 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இதற்கு 51,250 முன்பணம் செலுத்தி கடனுதவியும் பெறலாம். அதேபோல், கூடுதல் ரேஞ்சு கொண்ட வேரியன்டினை பேட்டரி இல்லாமல் 15.94 லட்சம் ரூபாய் என்ற விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். 60,452 ரூபாய் செலுத்தி கடனுதவியும் பெறலாம்.
60 மாத EMI-யுடன் பேட்டரி இல்லாமல் மேற்கூறிய அளவில் முன்பக்கம் செலுத்தி கேரன்ஸ் கிளாவிஸ் EV-யை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். பேட்டரிக்கு ஒரு கிமீ-க்கு 3.3 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு சராசரியாக கேரன்ஸ் கிளாவிஸ் EV-யை 50 கிமீ வரை பயன்படுத்துகிறீர்கள் என்றால், பேட்டரிக்கான பயன்பாட்டு கட்டணமாக 4,950 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இது ஒவ்வொரு மாதமும் பயன்பாட்டிற்கு ஏற்ப மாறுபடும்.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ் குறைவான தொடக்க விலையிலேயே கேரன்ஸ் கிளாவிஸ் EV எம்பிவி காரை வாடிக்கையாளர்களால் வாங்க முடியும். சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த எலெக்ட்ரிக் காரை கியா அப்டேட் செய்தது. முன்னர் 7 சீட்டராக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 6 சீட்டர் தேர்வும் கிடைக்கிறது. கூடுதல் வசதிகளுடன் இந்த எலெக்ட்ரிக் எம்பிவி காரின் புதிய வேரியன்ட்களையும் கியா அறிமுகப்படுத்தியிருப்பது குறப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் கார்களைப் பொறுத்தவரை BaaS திட்டம் வரவேற்புக்குரிய ஒரு திட்டமாகும். அதனை தங்களுடைய ஒரே மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் காரான கேரன்ஸ் கிளாவிஸ் EV-யில் கியா கொடுத்திருப்பது இன்னும் வரவேற்புக்குரியது. கியாவின் வருங்கால குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் இன்னும் குறைவான விலையில் அதன் எலெக்ட்ரிக் கார்களை நாம் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications