கார்களுக்கு 75% வரை ரீசேல் மதிப்புடன் திரும்ப எடுத்துக்கிறோம்: கியாவின் அதிரடி திட்டம்

கார் வாங்கும்போது அதன் விலை, மைலேஜ், வசதிகள் மட்டுமின்றி, சில ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதையும் வாடிக்கையாளர்கள் கவனிக்கின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு, கியா இந்தியா நிறுவனம் தனது பைபேக் (Buyback) திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல், ஹைபிரிட் மற்றும் மின்சார கார் வாங்க விரும்புவோருக்கு மறுவிற்பனை மதிப்பு தொடர்பான கூடுதல் நம்பிக்கையை பெறும் வகையில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

Kia Syros

ரீசேல் மதிப்பு

கியா கார் நிறுவனத்தின் இந்தத் திட்டத்தின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் உள்ளிட்ட மாடல்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்சம் 75 சதவீதம் வரை உறுதியளிக்கப்பட்ட மறுவிற்பனை மதிப்பு கிடைக்கும். மின்சார கார்களுக்கு இதே காலகட்டத்தில் அதிகபட்சம் 70 சதவீதம் வரை மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது அதிகபட்சமான மதிப்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து கார்களுக்கும் ஒரே மாதிரியாகக் கிடைக்கும் என்று கூற முடியாது வாடிக்கையாளர் தேர்வு செய்யும் மாடல், திட்டத்தின் கால அளவு, ஆண்டுக்கு எவ்வளவு தூரம் ஓடுகிறது மற்றும் ஒப்பந்த நிபந்தனைகளைப் பொறுத்து உறுதியளிக்கப்படும் தொகை மாறுபடும். எனவே, கார் வாங்கும்போதே தகுதியான திட்டத்தின் விவரங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.

Also Read

எந்தெந்த கார்களுக்கு பொருந்தும்?

கியாவின் சோனெட் (Sonet), சைரோஸ் (Syros), புதிய செல்டோஸ் (Seltos), கேரன்ஸ் (Carens), கேரன்ஸ் கிளாவிஸ் (Carens Clavis) மற்றும் சொரெண்டோ (Sorento) ஆகிய மாடல்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெறுகின்றன. இருப்பினும், ஒவ்வொரு மாடலிலும் கிடைக்கும் எரிபொருள் வகை மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து திட்டத்தின் நிபந்தனைகள் மாறுபடும்.

இதன் மூலம் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப வாகனத்தைத் தேர்வு செய்யவும், சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறு காருக்கு மாறுவதற்கான செலவுகளை முன்கூட்டியே கணக்கிடவும் முடியும். குறிப்பாக, அடிக்கடி காரை மாற்ற விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கலாம்.

Also Read

கால அளவு தேர்வு

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கார்களை வாங்குவோர் மூன்று, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்களைத் தேர்வு செய்யலாம். மின்சார கார்களை வாங்குவோருக்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கான திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது கார் பயன்பாட்டுக் காலத்துக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆண்டுக்கு 10,000 கி.மீ., 15,000 கி.மீ. அல்லது 20,000 கி.மீ. என மூன்று வகையான ஓடும் தூரத்திற்கான வரம்புகளும் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 20,000 கி.மீ. என்ற திட்டத்தைத் தேர்வு செய்தால், மொத்தம் ஒரு லட்சம் கி.மீ. வரையிலான பயன்பாட்டை உள்ளடக்கிய திட்டமாக இது அமையும்.

கியா ஷோரூம்களில் பதிவு செய்யலாம்

இந்த பைபேக் திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள், கார் வாங்கும்போது பங்கேற்கும் அங்கீகரிக்கப்பட்ட கியா டீலர்களை அணுகிப் பதிவு செய்யலாம். திட்டத்தின் இறுதியில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு உறுதியளிக்கப்பட்ட தொகையைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் நிர்வாகம் வேறு நிறுவனத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

கார் வாங்கிய பிறகு அதன் மறுவிற்பனை மதிப்பு எவ்வளவு இருக்கும் என்ற கவலை பலருக்கும் உள்ளது. குறிப்பாக, மின்சார கார்களின் எதிர்கால மறுவிற்பனை மதிப்பு குறித்த தயக்கத்தைப் போக்க இதுபோன்ற திட்டங்கள் உதவக்கூடும். இருப்பினும், அதிகபட்சமாக அறிவிக்கப்பட்டுள்ள சதவீதத்தை மட்டுமே வைத்து முடிவெடுக்காமல், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இறுதித் தொகை மற்றும் விதிமுறைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

Article Published On: Friday, October 9, 2026, 16:09 [IST]
English summary
Kia assured buyback programme india petrol diesel ev
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out