டொயோட்டாவை தூக்கி சாப்பிடும் தென் கொரிய நிறுவனம்.. இனி இவங்க தான் எல்லாம்!
இந்தியாவில் ஹோண்டா, ரெனோ, ஸ்கோடா உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் கார்களை விற்பனை செய்ய தினரும் நிலையில், அதனை அல்வா சாப்பிடுவது போல செய்யும் ஒரு நிறுவனம் கியா. கடந்த ஏப்ரல் மாதம் 27,286 கார்களை இந்தியாவில் அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனை விட அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இருக்கும் போது கியாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பில்ட்-அப் என்று கேட்கிறீர்களா.
மற்ற நிறுவனங்கள் எல்லாம் பல ஆண்டுகளாக இந்திய சந்தையில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் கியா 2019ல் தான் இந்திய சந்தையில் நுழைகிறது. தங்களுடைய முதல் காராக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கொண்ட செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்யூவியையே வெளியிடுகிறது. அந்தக் காருக்கும் கியாவிற்கு எதிர்பார்ப்பிற்கும் மேலாக விற்பனையாகி ஹிட்டடிக்க, இந்திய சந்தையில் வலுவாக கால் பதிக்கிறது அந்தத் தென்கொரிய நிறுவனம்.

அதன் பிறகு ஒவ்வொரு மாடலாக வெளியிட்டு தற்போது மூன்று சொகுசு கார்கள் உட்பட 9 கார் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இதில் மாஸ் மார்க்கெட் கார்களான செல்டோஸ், சோனெட், கேரன்ஸ், கேரன்ஸ் கிளாவில், கேரன்ஸ் கிளாவிஸ் EV மற்றும் சிராஸ் ஆகிய மாடல்கள் மட்டும் மேலே கூறிய அளவிற்கு விற்பனையாகியிருக்கின்றன. இத்துடன் ப்ரீமியம் காரான கார்னிவலின் 164 யூனிட்டுகளும் அடக்கம்.
கியாவிற்கு அதிகம் விற்பனையாகும் கார்கள் என்றால் அது மிட்-சைஸ் எஸ்யூவியான செல்டோஸும், சப்-காம்பேக்ட் எஸ்யூவியான சோனெட்டும் தான். கடந்த ஏப்ரல் மாதம் செல்டோஸ் மாடலானது 10,566 யூனிட்டுகளும், சோனெட் மாடலானது 10,537 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது முறையே 72.22 சதவீதம் மற்றும் 30.60 சதவீதம் விற்பனை உயர்வாகும்.

இவற்றுக்கு அடுத்தபடியாக அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் எம்பிவி மாடலான கேரன்ஸ், கேரன்ஸ் கிளாவிஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் EV ஆகியவை இணைந்து 5,465 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கிறது. கேரன்ஸ் என்பது முன்னர் விற்பனை செய்யப்பட்ட மாடல். அதன் அப்டேட் செய்யப்பட்ட வடிவம் தான் கேரன்ஸ் கிளாவிஸ். குறைவான விலையில் எம்பிவி கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக கேரன்ஸ் எம்பிவி மாடலின் தொடக்க நிலை வேரியன்டையும் விற்பனையில் வைத்திருக்கிறது கியா.
இந்த மாடல்களுக்கிடையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் என கியா மிகவும் எதிர்பார்த்த ஒரு கார் சிராஸ். சப்-காம்பேக்ட் பிரிவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சோனெட்டுடன், சற்று ப்ரீமியமான காராக சிராஸை வெளியிட்டது. மேம்பட்ட அம்சங்கள், இரண்டாம் வரிசை இருக்கை சொகுசு, ப்ரீமியமான பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் இந்தக் கார் வெளியானது.
முதலில் வெளியான சில மாதங்களில் நல்ல விற்பனை இருந்தாலும் பின்னர் படுத்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் வெறு்ம 554 சிராஸ் கார்களை மட்டுமே கியா விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு ஏபர்ல மாதத்துடன் ஒப்பிடும் போது 86.15 சதவீதம் குறைவான விற்பனையாகும். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சுமார் 4,000 சிராஸ் கார்கள் இந்தியாவில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
சிராஸ் எதிர்பார்தத அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும், செல்டோஸ் மற்றும் சோனெட் வாடிக்கையாளர்களிடம் இப்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தாண்டு தொடக்கத்தில் தான் செல்டோஸ் எஸ்யூவியை கியா அப்டேட் செய்தது. புதிய வெர்ஷன் முந்தைய வெர்ஷனை விட நல்ல விற்பனையைப் பதிவு செய்து வருகிறது. தொடர்ந்து ஹைபிரிட் பவர்ட்ரெயினுடனும் செல்டோஸை கியா அப்டேட் செய்யவிருக்கிறது. தற்போதிருக்கும் கார்களைத் தவிர்த்து சோரென்டோ என்ற புதிய 7 சீட்டர் எஸ்யூவி ஒன்றையும் இந்தியாவில் வெளியிட கியா திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications