டொயோட்டா இன்னோவா, மாருதி எர்டிகா சாம்ராஜ்யத்திற்கு செக்! அடிச்சு தூக்கிட்டு மேல வரும் கொரிய நிறுவனத்தின் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கியா கேரன்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) என்ற பெயரில் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த வரிசையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) என்ற பெயரில் கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆக மொத்தம் கியா கேரன்ஸ் தற்போது 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கியா கேரன்ஸ் கார் தற்போது விற்பனையில் புதிய மைல்கல் (Sales Milestone) ஒன்றை கடந்துள்ளது.

Kia Carens Clavis Front Seat

ஒட்டுமொத்தமாக 3 லட்சம் கியா கேரன்ஸ் கார்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். இந்த 3 லட்சம் கார்களில் 60 சதவீத கார்கள் பெட்ரோல் மூலமாக இயங்க கூடியவை ஆகும். அதே நேரத்தில் டீசல் மூலமாக இயங்க கூடியவை 30 சதவீதமாக இருக்கிறது. எஞ்சிய 10 சதவீதம் எலெக்ட்ரிக் ஆகும்.

கியா கேரன்ஸ் காரை பொறுத்தவரை அதன் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுக்குதான் வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளனர் என்பது இந்த புள்ளி விபரம் மூலம் நமக்கு தெரிய வருகிறது. கியா கேரன்ஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் CRDi VGT டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.

Kia Carens Clavis

மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரில் இந்த இரண்டு இன்ஜின்களுடன் கூடுதலாக 1.5 லிட்டர் T-Gdi பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. அதாவது கியா கேரன்ஸ் காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்களும், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரில் 3 இன்ஜின் ஆப்ஷன்களும் கொடுக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுகின்றன. அவை 42 kWh மற்றும் 51.4 kWh ஆகியவை ஆகும். இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் முறையே 404 மற்றும் 490 கிலோ மீட்டராக இருக்கிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 11.02 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் ஆரம்ப விலை 11.27 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த வரிசையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 18.01 லட்ச ரூபாயாக உள்ளது. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில் பாஸ் (BaaS) ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

பாஸ் முறையில் வாங்கினால் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 12.85 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு நீங்கள் 3.3 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். கியா கேரன்ஸ் குடும்பத்தில் கியா கேரன்ஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் ஆகிய 2 கார்களும் 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன.

அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரானது, 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என 2 ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) ஆகிய கார்களுக்கு எல்லாம் கியா கேரன்ஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் ஆகியவை மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கின்றன.

மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரானது, மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது. கூடிய விரைவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக புதிய எலெக்ட்ரிக் எம்பிவி (Electric MPV) கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்தின் தயாரிப்பான கேரன்ஸ் குடும்ப கார்கள் சிறப்பான இடவசதியை வழங்குகின்றன. அத்துடன் சக்தி வாய்ந்த இன்ஜின் மற்றும் பேட்டரி ஆப்ஷன்களையும் அவை பெற்றுள்ளன. கூடவே ஏராளமான அதிநவீன வசதிகளையும் கியா நிறுவனம் வழங்கியுள்ளது. இவற்றுடன் விலையும் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவின் எம்பிவி கார் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை கியா கேரன்ஸ் குடும்ப கார்கள் பெற்றுள்ளன.

Article Published On: Wednesday, July 15, 2026, 11:13 [IST]
English summary
Kia carens 3 lakh units sales milestone price seating capacity engine battery range
மேலும்... #kia motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out