சென்னைல இருந்து மதுரை போக வெறும் 67 ரூபாதான் செலவாகுமா! ஆம்னி பஸ் ஓனர்களின் தலையில் இடியை இறக்கிய புது கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி ரக கார்களில் (MPV Cars) ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). தற்போதைய நிலையில் மொத்தம் 3 வெர்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை கியா கேரன்ஸ், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) ஆகியவை ஆகும்.

இந்த சூழலில், கியா கேரன்ஸ் காரின், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), தற்போது வெளியாகியுள்ளது. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒட்டுமொத்தமாக 3,681 கியா கேரன்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Kia Carens Clavis EV Seats

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 2,626 கியா கேரன்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 1,055 கியா கேரன்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் கியா கேரன்ஸ் கார் விற்பனையில் 40 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இங்கே ஒரு விஷயத்தை நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும். இந்த செய்தியில் கூறப்பட்டிருப்பது, கியா கேரன்ஸ் காரின் 3 வெர்ஷன்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை என்பதுதான் அது.

Kia Carens Clavis EV

கியா கேரன்ஸ் காரின் இந்த வளர்ச்சிக்கு கியா கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி ஆகிய 2 புதிய வெர்ஷன்களின் வருகைதான் மிகவும் முக்கியமான காரணம். அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கியா கேரன்ஸ் என்ற ஒரே ஒரு வெர்ஷன் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரும், அதை தொடர்ந்து அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனான கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதமும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதன் காரணமாகவே கியா கேரன்ஸ் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை தற்போது வெகுவாக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 11 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் ஆரம்ப விலை 11.08 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை அனைத்துமே கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். கியா கேரன்ஸ் வரிசையில் கடைசியாக விற்பனைக்கு வந்திருப்பது கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார்தான். இதன் முக்கியமான சிறப்பம்சமே, அதை இயக்குவதற்கு ஆகும் செலவுதான் (Running Cost).

கார்தேக்கோ தளத்தின் தரவுகளின்படி பார்த்தால், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 1.05 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். அப்படியானால் சென்னையில் இருந்து மதுரை வர வெறும் சுமார் 472 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். சென்னை-மதுரை இடையேயான தொலைவு சுமார் 450 கிலோ மீட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில் 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும். அப்படியானால் சென்னையில் இருந்து மதுரை வர ஒருவருக்கு சுமார் 67 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். ஆனால் காரை ஓட்டும் விதம் உள்ளிட்ட காரணிகளை பொறுத்து, இயக்குவதற்கு ஆகும் செலவு சற்று மாறுபடலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) போன்ற எம்பிவி ரக கார்களுக்கு எல்லாம், கியா கேரன்ஸ் கார் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.

தற்போது பொங்கல் பண்டிகையை கொண்ட பலரும் சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வந்து கொண்டுள்ளனர். ஆனால் 'டிமாண்ட்' அதிகமாக உள்ளதால், ஆம்னி பஸ்களின் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. இது போன்ற சமயங்களில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி போன்ற கார்களில் பயணம் செய்தால், மிகவும் குறைவான செலவே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 15, 2026, 17:21 [IST]
English summary
Kia carens clavis ev sales report december 2025 40 per cent growth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+