இன்னோவாவை விட ரூ.7 லட்சம் குறைவு! ஒரு கிமீ ஓட்றதுக்கு 1 ரூபாதான் செலவு! இந்தியாவையே மிரள விடும் 7 சீட்டர் கார்

இந்திய சந்தையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய எம்பிவி ரக கார்களுக்கு (MPV Cars), மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இந்த கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார், இந்திய வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்றது. இந்த கார் கட்டுமான தரத்தில் சிறந்து விளங்குவதுடன், பயணிகளுக்கு மிகவும் சௌகரியமான பயணத்தையும் வழங்குகிறது. அத்துடன் நீண்ட காலத்திற்கு பிரச்சனை இல்லாமல் உழைக்க கூடிய சக்தி வாய்ந்த இன்ஜினையும் கொண்டுள்ளது.

Kia Carens

இருப்பினும் இது சற்று விலை உயர்ந்த கார் ஆகும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 18.85 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 25.67 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்தும் டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இது சற்று விலை உயர்ந்தது என்பதால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை காட்டிலும் மிகவும் குறைவான விலையில் ஒரு எம்பிவி காரை நீங்கள் தேடி கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு ஆப்ஷன் உள்ளது. அது கியா கேரன்ஸ் (Kia Carens) ஆகும். இந்த கார் தற்போதைய நிலையில் மொத்தம் 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Kia Carens Clavis Front Seat

அவை கியா கேரன்ஸ், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) ஆகியவை ஆகும். இதில், கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 10.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதாவது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை விட 7.86 லட்ச ரூபாய் குறைவு.

கியா கேரன்ஸ் கார் 7 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.21 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதாவது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை விட 7.64 லட்ச ரூபாய் குறைவு. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது.

மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 17.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதாவது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை விட 86 ஆயிரம் ரூபாய் குறைவு. அத்துடன் இது எலெக்ட்ரிக் கார் என்பதால், இயக்குவதற்கு மிகவும் குறைவாகவே செலவு ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு 1.05 ரூபாய் மட்டுமே செலவு ஆகும் என கார்தேக்கோ தளம் தெரிவிக்கிறது. இது கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஆகும். அத்துடன் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரும், 7 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கிறது.

அத்துடன் கியா கேரன்ஸ், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி என 3 வெர்ஷன்களிலும் பல்வேறு அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன. இது போன்ற காரணங்களால், கியா கேரனஸ் காரின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல.

ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், கியா நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக (3 வெர்ஷன்களும் சேர்த்து) 6,815 கியா கேரன்ஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 5,633 கியா கேரன்ஸ் கார்களும், கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5,318 கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இம்முறை 1,182 கியா கேரன்ஸ் கார்களும், கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இம்முறை 1,497 கியா கேரன்ஸ் கார்களும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் 20.98 சதவீத வளர்ச்சியையும், வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் 28.15 சதவீத வளர்ச்சியையும் கியா கேரன்ஸ் கார் பதிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் கியா கேரன்ஸ் காருக்கு எவ்வளவு பெரிய வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர் என்பதற்கு தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மட்டுமல்லாது, மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற கார்களுக்கும் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 21, 2026, 18:17 [IST]
English summary
Kia carens clavis ev sales report february 2026 28 per cent growth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+