ஒரு கிலோ மீட்டருக்கு 1 ரூபா மட்டுமே செலவு! அதுவும் 7 பேர் போகலாம்! அப்படினா எவ்ளோ ஓட்டினாலும் செலவே ஆகாதே!
இந்திய சந்தையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான எம்பிவி ரக கார்களுக்கு (MPV Cars) எப்போதுமே நல்ல 'டிமாண்ட்' இருந்து வருகிறது. குறிப்பாக இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கியா கேரன்ஸ் (Kia Carens) கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டுள்ளது. இதன் காரணமாக கியா கேரன்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் சிறப்பாக இருந்து வருகிறது.
இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. கியா கேரன்ஸ் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக 5,633 கியா கேரன்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 5,522 கியா கேரன்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 111 கியா கேரன்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 2 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலமாக கியா கேரன்ஸ் நடப்பு 2026ம் ஆண்டை மிகவும் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. அத்துடன் 2 சதவீத வளர்ச்சியின் மூலம், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஏழு இருக்கை (7 சீட்டர்) கார்களின் பட்டியலில் (Top 10 7-Seater Cars January 2026), கியா கேரன்ஸ் 6வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio), மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero), மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) மற்றும் டொயோட்டா இன்னோவா (Toyota Innova) போன்ற கார்கள் உள்ளன.
இந்த வரிசையில் 6வது இடம் பிடித்துள்ள கியா கேரன்ஸ் கார் மொத்தம் 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை கியா கேரன்ஸ், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) ஆகியவை ஆகும்.
இதில், கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் ஆரம்ப விலை 11.08 லட்ச ரூபாயாக உள்ளது. இறுதியாக கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் காரின் 3 வெர்ஷன்களுமே 7 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கின்றன. எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
குறிப்பாக அதிகம் பேர் பயணம் செய்ய கூடியதாகவும் இருக்க வேண்டும், இயக்குவதற்கும் மிகவும் குறைவாகவே செலவு ஆக வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி மிகவும் ஏற்றது. இதை ஒரு கிலோ மீட்டர் இயக்க வெறும் 1.05 ரூபாய் மட்டுமே செலவு ஆகும் என கார்தேக்கோ தளம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications








