திருச்சியில் இருந்து மதுரைக்கு 7 பேர் வர வெறும் 136 ரூபா மட்டுமே செலவு! மாருதி எர்டிகாவிற்கு எமன்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis). 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 5,933 கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 5,512 கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது இம்முறை 421 கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 7.64 சதவீத வளர்ச்சி ஆகும். வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் வளர்ச்சி என்றாலும் கூட, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார் விற்பனையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதாவது நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக 6,815 கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த மார்ச் மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒட்டுமொத்தமாக வெறும் 5,933 கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது இந்த வகையில் பார்த்தால் 882 கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 12.94 சதவீத வீழ்ச்சி ஆகும். இருப்பினும் இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், கூடிய விரைவிலேயே மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் தற்போதைய நிலையில் மொத்தம் 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை கியா கேரன்ஸ் (Kia Carens), கியா கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) ஆகியவை ஆகும்.
இதில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இதற்கு நேரடி போட்டியாக வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் கார் இன்று (ஏப்ரல் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சரி, விஷயத்திற்கு வருவோம்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 11 லட்ச ரூபாயாக உள்ளது. இது 7 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் ஆரம்ப விலை 11.21 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது 7 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரை போலவே, இதுவும் 7 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை 1 கிமீ இயக்க 1.05 ரூபாய் மட்டுமே செலவு ஆகும் என கார்தேக்கோ தளம் கூறியுள்ளது.
அதாவது திருச்சியில் இருந்து மதுரைக்கு 7 பேர் வர சுமார் 136 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். திருச்சி-மதுரை இடையேயான தொலைவு சுமார் 130 கிலோ மீட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே மிகவும் குறைவான செலவில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷன் ஆகும்.
மறுபக்கம் வசதிகளை (Features) பொறுத்தவரையில், கியா கேரன்ஸ் காரில் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கீலெஸ் எண்ட்ரி, ரியர் வியூ கேமரா, நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற அம்சங்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன.
அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி ஆகிய 2 கார்களிலும் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. எனவே இவை அனைத்துமே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற கார்களுக்கு எல்லாம், கியா கேரன்ஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் ஆகியவை மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளன. அதே நேரத்தில் வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








