7 பேருடன் ஃபேமலியா பயணிக்க ஏற்ற கியா கார்... சன்ரூஃப் உடன் 12.5 லட்ச ரூபாயில்!! எல்லாரும் வாங்கி போட போறாங்க
கியா இந்தியா (Kia India) நிறுவனம், தனது கேரன்ஸ் க்ளாவிஸ் (Carens Clavis) காரின் வேரியண்ட்கள் வரிசையில் புதிய 'எச்டிஇ (இ.எக்ஸ்)' (HTE(EX)) வேரியண்ட்டை சன்ரூஃப் (Sunroof) வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. கேரன்ஸ் க்ளாவிஸ் காரில் எச்டிஇ (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டிற்கு மேலே நிலைநிறுத்தப்பட்டுள்ள இது, உயர் நிலை எச்.டி.எக்ஸ் (HTX) வேரியண்ட்களுக்கு இணையான கூடுதல் அம்சங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய தேர்வாகும்.
ஏற்கனவே கூறியதுபோல், எச்டிஇ (இ.எக்ஸ்) வேரியண்டின் முக்கிய அம்சம் சிங்கிள்-பேன் (Single-pane) சன்ரூஃப் ஆகும். இதனுடன் சேர்த்து இரு ஏர்பேக்குகள், இபிடி (EBD) உடன் ஏபிஎஸ் (ABS), எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் இந்த புதிய வேரியண்ட் வந்துள்ளது.

இருக்கை அமைப்பு மாறவில்லை; இதனால் க்ளாவிஸின் இடவசதி, நெகிழ்வுத்தன்மை தக்க வைக்கப்பட்டுள்ளது. உயர் நிலை கேரன்ஸ் வேரியண்ட்களில் முழு தானியங்கி வெப்பநிலை கண்ட்ரோல் (FATC), கண்ணைக் கவரும் LED DRL-கள், பொசிஷன் லேம்ப்கள், அத்துடன் LED கேபின் விளக்குகள் வழங்கப்படுகின்றன. ஓட்டுநர் பக்க பவர் விண்டோ, ஆட்டோ அப்/டவுன் செயல்பாட்டுடன் இந்த காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்கள் கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்பை வழங்குகின்றன.
கியா இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் மூத்த துணைத் தலைவர் திரு.அதுல் சூட் புதிய வேரியண்ட் அறிமுகம் குறித்து கூறியதாவது, "வாடிக்கையாளர்களின் தேவைகளை கேட்டதன் விளைவாகவே புதிய எச்டிஇ (இ.எக்ஸ்) வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜி1.5 என்ஜின் ஆப்ஷன்களை கொண்ட கேரன்ஸ் க்ளாவிஸில் முதல்முறையாக ஸ்கைலைட் சன்ரூஃபை அறிமுகப்படுத்தி, அனைத்து என்ஜின் ஆப்ஷன்களிலும் இந்த புதிய வேரியண்ட்டை வழங்குவதன் மூலம், இது குடும்பங்களுக்கு கவர்ச்சிகரமான தேர்வாகிறது.

மேலும், எங்கள் வாடிக்கையாளர் அணுகுமுறையையும், போட்டி நிறைந்த இந்திய சந்தையில் கியாவின் இருப்பை வலுப்படுத்தும் உறுதிப்பாட்டையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்றார். கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான 1.5 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மூன்று என்ஜின் ஆப்ஷன்களும் மேனுவல், ஐ.எம்.டி (iMT), ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. தற்சமயம் கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.08 லட்சத்தில் இருந்து ரூ.20.71 லட்சம் வரையில் உள்ளன. ஆர்டிஓ (RTO) பதிவு கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்து ஆன்-ரோடு விலை இன்னும் அதிகமாக வரும். என்ஜின் ஆப்ஷன்களை பொறுத்து, புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் எச்டிஇ (இஎக்ஸ்) காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை கீழே காணலாம்.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் எச்டிஇ (இ.எக்ஸ்) - 2026
7-சீட்டர் மாடல் விலை பட்டியல் (Ex-Showroom)
| எச்டிஇ (இ.எக்ஸ்) 1.5 பெட்ரோல் 7-சீட்டர் | ரூ.12,54,900 |
| எச்டிஇ (இ.எக்ஸ்) 1.5 டர்போ பெட்ரோல் 7-சீட்டர் | ரூ.13,41,900 |
| எச்டிஇ (இ.எக்ஸ்) 1.5 டீசல் 7-சீட்டர் | ரூ.14,52,900 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரின் புதிய எச்டிஇ (இஎக்ஸ்) வேரியண்ட் ஆனது சன்ரூஃப், பல என்ஜின் மற்றும் நெகிழ்வான இருக்கை தேர்வுகளை வழங்கி, இந்திய நடுத்தர எம்பிவி (MPV) கார்கள் பிரிவில் கியாவின் நிலையை வலுப்படுத்துகிறது. இதனால், வரும் மாதங்களில் இந்த கியா காரின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு இத்தகைய காரை கியா அறிமுகப்படுத்தி உள்ளதாகவே இதை கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








