கியா கேரன்ஸ் சிஎன்ஜி, கார்னிவல் ஹைப்ரிட் கார்களுக்கு முன்பதிவு தொடங்கியது... முழு விபரம்!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், கியா நிறுவனம் மாற்று எரிபொருள் தேர்வை கேரன்ஸ் மற்றும் கார்னிவல் கார்களில் கொண்டு வந்துள்ளது. அதன்படி, சிஎன்ஜி எரிபொருள் தேர்வுடன் கேரன்ஸ், கேரன்ஸ் கிளாவிஸ் கார்களையும், கார்னிவல் காரின் ஹைப்ரிட் மாடலையும் அண்மையில் அறிவித்தது. அதன்படி, இந்த மூன்று மாடல்களுக்கும் தற்போது முன்பதிவு துவங்கி இருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற கியா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் "இன்ஸ்பிரேஷன் டே" என்ற நிகழ்ச்சியில் இந்த மூன்று மாடல்களுமே காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்தநிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. விலை விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Kia Carens CNG

கேரன்ஸ், கிளாவிஸ் சிஎன்ஜி

கியா கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் ஆகிய இரண்டு மாடல்களும் மூன்று வரிசை இருக்கை அமைப்புடைய எம்பிவி கார்களாக விற்பனையில் உள்ளன. இந்த இரு மாடல்களிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் தேர்வில் கிடைக்கும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Also Read

கார் தயாரிக்கும்போதே தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி எரிபொருள் அமைப்புடன் இந்த கார்கள் வருகின்றன. இந்த கார்களில் 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி எரிபொருள் டேங்க் இடம்பெறுகிறது.

Clavis CNG

சில மாற்றங்கள்

சிஎன்ஜி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எஞ்சினிலும், சஸ்பென்ஷனிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல், சிஎன்ஜி என இரண்டு எரிபொருளில் இயங்கும் வகையில் தேர்வு செய்வதற்கான சுவிட்ச் அமைப்பும் உள்ளது.

இந்த காரில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரின் 4.2 அங்குல TFT MID திரையில், இருக்கும் சிஎன்ஜி எரிபொருளில் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதை கணக்கிடும் வசதி இடம்பெறுகிறது. மூன்றாவது வரிசை பயணிகளின் வசதிக்காக அதிக சாய்மானத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

Also Read

கேரன்ஸ் காரின் Premium (O) என்ற வேரியண்ட்டில் இந்த சிஎன்ஜி எரிபொருள் தேர்வு கிடைக்கும். கேரன்ஸ் கிளாவிஸ் CNG-யை பொறுத்தவரை HTE மற்றும் HTE (O) வேரியண்ட்டுகளில் வழங்கப்பட உள்ளது.

வழக்கமான தனிநபர் பயன்பாட்டைத் தாண்டி, டாக்ஸி பயன்பாட்டையும் கியா மோட்டார் இந்தியா கருத்தில் கொண்டுள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்காக கேரன்ஸ் சிஎன்ஜி கார் M-Drive என்ற வேரியண்ட்டிலும், கேரன்ஸ் கிளாவிஸ் சிஎன்ஜி மாடலானது HTM வேரியண்டில் வழங்கப்படுகின்றன.

Carnival

கார்னிவல் லிமோசின் ஹைபிரிட்

கியா நிறுவனத்தின் பிரீமியம் எம்பிவியான கார்னிவல் லிமோசின் காரின் ஹைபிரிட் மாடலுக்கும் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இந்த காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன், மின் மோட்டார் அமைப்புடன் கூடிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இந்த மாடல் Limousine+ வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும். பிரீமியம் வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஹைபிரிட் மாடலில் ஏராளமான வசதிகள் உள்ளன.

Article Published On: Friday, September 11, 2026, 9:36 [IST]
English summary
Kia carens cng carens clavis cng carnival limousine hybrid pre booking india
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X