கியா கார்னிவல் ஹைப்ரிட் காரின் இந்திய அறிமுகம் உறுதியானது

அதிக இடவசதியுடன் கூடிய எம்பிவி கார் வாங்க விரும்புவோரின் முக்கிய தேர்வாக கியா கார்னிவல் எம்பிவி இருந்து வருகிறது. மேலும், பிரீமியம் எம்பிவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள கியா கார்னிவல் கார் விரைவில் ஹைப்ரிட் மாடலிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இன்று கியா நிறுவனம் சொரென்டோ காரின் அறிமுக நிகழ்வின் போது, கார்னிவல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலின் வருகை குறித்தும் உறுதி செய்தது.

கியா சொரென்டோ காரில் பயன்படுத்தப்படும் அதே பெட்ரோல், எலெக்ட்ரிக் ஹைப்ரிட் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய கார்னிவல் ஹைப்ரிட் மாடல் வர இருக்கிறது. இதில், 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இன்ஜின் தனியாக 180எச்பி பவரையும், 265என்எம் டார்க்கையும் வழங்கும்.

Kia Carnival

இதனுடன் இணைக்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் 73.4எச்பி பவரையும், 304என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருக்கும். புதிய சொரென்டோ ஹைப்ரிட் காருடன் ஒப்பிடும்போது கார்னிவலில் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் கூடுதலாக 8.4எச்பி பவரையும் 40என்எம் டார்க்கையும் வழங்கும் வகையில் இருக்கிறது.

இந்த கார்னிவல் ஹைப்ரிட் மாடலில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் கார்னிவல் ஹைப்ரிட் மாடலில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்னிவல் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 193எச்பி பவரையும் 441என்எம் டார்க்கையும் வழங்கும். இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. தற்போதைய இந்தகார் 5,155மிமீ நீளமும், 1,995மிமீ அகலமும், 1,775மிமீ உயரமும் கொண்டதாக உள்ளது. இந்த காரின் வீல்பேஸ் 3,090மிமீ நீளமுடையது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது.

ஹைப்ரிட் மாடலில் எரிபொருள் சிக்கனம் மட்டுமின்றி, நகரப் போக்குவரத்தில் குறைந்த வேகத்தில் எலெக்ட்ரிக் மோட்டாரின் உதவியால் மென்மையான ஓட்டுதல் அனுபவமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய கார்னிவல் காரில் இரண்டாவது வரிசையில் விஐபி இருக்கைகள், இரண்டு சன்ரூஃப் வசதி, 12.3 அங்குல திரைகளுடன் டேஷ்போர்டு சாதனங்கள், 8 ஏர்பேக்குகள் மற்றும் ADAS போன்ற பிரீமியம் வசதிகள் உள்ளன.

கியா கார்னிவல் ஹைப்ரிட் இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை, வேரியண்ட்டுகள், மைலேஜ் மற்றும் முழுமையான விபரங்களை கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

Article Published On: Friday, September 4, 2026, 15:18 [IST]
English summary
Kia carnival hybrid confirmed for india launch specifications engine power torque details
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out