10 ஆயிரம் பேர் ஒரே மாதத்தில் வாங்கிய கியா கார்! ஹூண்டாய் கிரெட்டாவை வாங்க முடியாதவர்களுக்கு சரியான ஆப்ஷன்!

தென்கொரிய கார் நிறுவனமான கியா இந்தியாவில் கடந்த 2026 மே மாதத்தில் மட்டும் சுமார் 27 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது. கியாவில் இருந்து இந்தியாவில் 5 கார் மாடல்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவை ஒவ்வொன்றும் கடந்த மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் கியா நிறுவனம் கடந்த மே மாதத்தில் மொத்தம் 27 ஆயிரத்து 586 கார்களை விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டில் இதே மே மாதத்தில் வெறும் 22 ஆயிரத்து 315 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கியா கார்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது 23.62%, அதாவது 5,271 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

kia cars sales report

கடந்த 2026 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையிலும், மே மாதத்தில் 300 கியா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 ஆயிரத்து 286 கார்களை மட்டுமே கியா விற்பனை செய்திருந்தது. கியா நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐந்து கார் மாடல்களாவன, செல்டோஸ், சொனெட், கேரன்ஸ் கிளாவிஸ், சிரோஸ் மற்றும் கார்னிவல் ஆகும்.

இதில், கேரன்ஸ் கிளாவிஸ் ஆனது இவி வெர்சனிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், வழக்கம்போல் கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கியா காராக முதலிடத்தை செல்டோஸ் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட செல்டோஸ் கார்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 597 ஆகும்.

kia cars sales report

கடந்த ஏப்ரல் மாதத்திலும் கிட்டத்தட்ட இதற்கு இணையாக, 10 ஆயிரத்து 566 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்ய்யப்பட்டு இருந்தன என்றாலும், 2025 மே மாதத்தில் வெறும் 6,082 செல்டோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் 4,515 செல்டோஸ் கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

செல்டோஸிற்கு அடுத்து 2வது இடத்தை வழக்கம்போல், கியா சொனெட் பிடித்துள்ளது. கடந்த ஏப்ரலில் 10,537 சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மே மாதத்தில் 9,707 சொனெட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன். கடந்த ஆண்டு மே மாதத்தில் இன்னும் குறைவாக 8,054 சொனெட் கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.

Kia May-26 May-25 Diff % Change YoY
Seltos 10,597 6,082 4,515 74.24
Sonet 9,707 8,054 1,653 20.52
Carens Clavis / EV 6,208 4,524 1,684 37.22
Syros 961 3,611 -2,650 -73.39
Carnival 113 44 69 156.82
Total 27,586 22,315 5,271 23.62
Kia May-26 Apr-26 Diff % Change MoM
Seltos 10,597 10,566 31 0.29
Sonet 9,707 10,537 -830 -7.88
Carens Clavis / EV 6,208 5,465 743 13.60
Syros 961 554 407 73.47
Carnival 113 164 -51 -31.10
Total 27,586 27,286 300 1.10

ஆனால், 2025 மே மாதத்தில் செல்டோஸை காட்டிலும் அதிகமாக அதிக எண்ணிக்கையில் விற்பனையான கியா காராக சொனெட் முதலிடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான கியா காராக 3வது இடத்தை கேரன்ஸ் கிளாவிஸ் பிடித்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், கேரன்ஸ் கிளாவிஸ் இவி என்கிற எலெக்ட்ரிக் காரும் விற்பனை செய்யப்படுகிறது.

மொத்தமாக கடந்த மாதத்தில் 6,208 கேரன்ஸ் கிளாவிஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் 5,465 கேரன்ஸ் கிளாவிஸ் கார்களும், 2025 மே மாதத்தில் 4,524 கார்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவை இல்லாமல், கடந்த மாதத்தில் 961 சிரோஸ் கார்கள் மற்றும் 113 கார்னிவல் கார்களையும் கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக கியா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருப்பது இந்தியாவில் கியாவின் மார்க்கெட் எந்த அளவிற்கு விரைவடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. குறிப்பாக, கியா செல்டோஸ் ஆனது இந்தியாவின் தவிர்க்க முடியாத கார்களுள் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

Article Published On: Saturday, June 13, 2026, 15:51 [IST]
English summary
Kia cars sales report of may 2026 seltos sonet carens clavis and syros
மேலும்... #kia motors #kia seltos #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out