5 லட்சம் பேர் இந்த வசதி உள்ள காரை வாங்கிட்டாங்க! அப்படி இதுல என்ன இருக்குது?

கியா நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் கனெக்டெட் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் மக்கள் மத்தியில் கனெக்டெட் கார் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் கனெக்டெட் கார்கள் மீது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த ரக கார்கள் மக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குவதால் இந்த ரக கார்களை மக்கள் விரும்புகின்றனர். இருந்தாலும் மக்கள் மத்தியில் கனெக்டெட் கார்கள் மீதான விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. இதற்கிடையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கனெக்டெட் கார்களை விற்பனை செய்து அவர்களதுஇ பயண அனுபவத்தை மேம்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.

Kia Connected Car Sales

இதற்கிடையில் கியா நிறுவனம் தற்போது 5 லட்சம் கனெக்டெட் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளனர். கியா நிறுவனம் தற்போது விற்பனை செய்யும் கார்களில் 40 சதவீதம் கனெக்டெட் கார் வேரியன்ட்கள் தான் இருக்கிறது அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியா நிறுவனம் சமீபத்தில் தான் கியா கனெக்ட் 2.0 என்ற சிஸ்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது மார்கெட்டில் இந்த ரக கார்களுக்கு எவ்வளவு டிமாண்ட் கிடைத்துள்ளது என்பதை காட்டுகிறது. கியா விற்பனை செய்த கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்தில் கியா செல்டோஸ் கார் தான் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

கியா நிறுவனம் 100 கனெக்டெட் கார் தொழிற்நுட்பம் கொண்ட கார்களை விற்பனை செய்தால் அதில் 70 கார்கள் செல்டோஸ் கார்களாக உள்ளது. அதே நேரம் சோனட் மற்றும் கேரன்ஸ் கார்களும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளது. மிட் சைஸ் செக்மெண்டில் கனெக்டெட் கார் ஒரு முக்கியமான தொழிற்நுட்பமாக மாறியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியா நிறுவனம் தற்போது கனெக்டெட் கார் தொழிற்நுடப்தத்தை வாடிக்கையாளர்களை என்கேஜாக வைக்கும் ஒரு சிஸ்டமாக பார்க்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தேவையை புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் அவர்களுக்கு ஒரு திருப்திகரமான அனுபவத்தையும் பெற முடியும் என தெரிவித்துள்ளது. இதற்காக காம்பிளிமென்ட்ரி கனெக்டெட் கார் சப்ஸ்கிரீப்ஷன்களை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

மேலும் இந்த கனெக்டெட் கார் சாஃப்ட்வேர்களை அப்டேட் செய்ய ஓவர் தி ஏர் அப்டேட் வசதி இருக்கிறது. இது போக ரிமோட் மூலமே பிரச்சனைகளை கண்டறிந்து சரி செய்யும் வசதி, சரவுண்ட் வியூ மானிட்டரிங், பல மொழிகளில் வாய்ஸ் அம்சம் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. இதை வாடிக்கையாளர்கள் பலர் பயன்படுத்தி வருகின்றரன்.

எலெக்ட்ரிக் வாகனத்தில் 100 சதவீதம் கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்தை பொருத்தியுள்ளது. இவி கார்களில் கனெக்டெட் அம்சம் ஸ்மார்ட் ஹோம் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுபுற சூழலுக்கு ஏற்படும் மாசுவை கண்காணிக்க உதவுகிறது. இதனால் இது சுற்றுசூழலுக்கும் பல்வேறு நன்மைகளை பயக்கிறது. அதை கண்காணிக்கவும் உதவுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா நிறுவனம் கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு அதை தனது கார்களில் புகுத்தி வருகிறது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் அதிக நபர்கள் இந்த காரை விரும்பி வருகின்றனர். இந்த கார்கள் நிச்சயம் மக்கள் விரும்பும் வகையில் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 10, 2026, 14:15 [IST]
English summary
Kia connected car sales cross 500000 in india
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+