இந்தியாவில் 5 புதிய ஹைப்ரிட் கார்களை களமிறக்கும் கியா... செல்டோஸ் ஹைப்ரிட்டும் வருகிறது!!

இந்தியாவில் ஹைப்ரிட் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், கியா மோட்டார் நிறுவனம் 5 புதிய ஹைப்ரிட் கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதை உறுதி செய்துள்ளது. இதில், சொரென்டோ, கார்னிவல், செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்களின் ஹைப்ரிட் மாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்ட உள்ளன.

கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ திட்டத்தின்படி, சொரென்டோ மற்றும் கார்னிவல் ஹைப்ரிட் மாடல்கள் நடப்பு ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து, செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்களின் ஹைப்ரிட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

Kia Sorento

சொரென்டோ ஹைப்ரிட்

தற்போதைய திட்டத்தில் உள்ள சொரென்டோ ஹைப்ரிட் மாடலானது வரும் செப்டம்பர் 4ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கியா ஆலையில் உற்பத்தியும் துவங்கப்பட்டுவிட்டது. இந்த மாடலில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எனப்படும் தொழில்நுட்பம் இருப்பதால், பெட்ரோல் எஞ்சினுடன் இணைந்து மின் மோட்டாரும் துணைபுரியும். இதனால், கூடுதல் மைலேஜுடன் எரிபொருள் சிக்கனத்திற்கு உதவும்.

Also Read

இந்த காரின் படங்கள் அதிகாரப்பூர்வமாக அண்மையில் வெளியிடப்பட்டன. ஆனால், எஞ்சின் உள்ளிட்ட விபரங்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. இது கியாவின் மிகவும் பிரிமீயம் ஹைப்ரிட் எஸ்யூவி மாடலாக ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வேகன் டெய்ரோன் கார்களுடன் போட்டி போடும்.

Also Read

கார்னிவல் ஹைப்ரிட்

இந்தியாவின் எம்பிவி மார்க்கெட்டில் அதிக இருக்கை வசதி மற்றும் தாராள இடவசதி கொண்ட பிரிமீயம் மாடலாக கியா கார்னிவல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு புதிய தேர்வை வழங்கும் வகையில் நடப்பு ஆண்டு இறுதியில் கார்னிவல் ஹைப்ரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடலில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். சொரென்டோ ஹைப்ரிட் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனைக்கு வரும் நிலையில், கார்னிவல் ஹைப்ரிட் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

Kia Seltos

செல்டோஸ் ஹைப்ரிட்

அடுத்த ஆண்டு மத்தியில் செல்டோஸ் ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் உள்நாட்டு பாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மின் மோட்டார் இணைக்கப்பட்ட ஹைப்ரிட் மாடலாக வருவதுடன், கூடுதலாக ஒரு மின் மோட்டார் கொடுத்து 4 ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தையும் வழங்க கியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், செல்டோஸ் ஹைப்ரிட் மாடல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Sonet

சோனெட் ஹைப்ரிட்

அடுத்து அதிக ஆவலை ஏற்படுத்தும் மாடலாக சோனெட் ஹைப்ரிட் இந்த பட்டியலில் உறுதியாகி இருக்கிறது. இந்த மாடலில் இடம்பெற இருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த உருப்படியான தகவல் இப்போதைக்கு இல்லை. ஆனால், 2028-29 காலக் கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.அதேபோன்று கேரன்ஸ் காரின் ஹைப்ரிட் மாடலும் சோனெட் மாடலுக்கு அடுத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு மாடல்களுமே இரண்டாம் தலைமுறை மாற்றங்களுடன் ஹைப்ரிட் எரிபொருள் வகையிலும் கிடைக்கும்.

கியா நிறுவனத்தின் இந்த திட்டம் இந்தியாவில் ஹைப்ரிட் எஸ்யூவி மற்றும் குடும்பக் கார்களின் சந்தையில் வலுவான இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பு தெரிகிறது.ஏற்கெனவே இந்தியாவில் விற்பனையில் இருப்பதுடன், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்ற பிரபலமான மாடல்களில் ஹைப்ரிட் தொழில்நுட்பம் அறிமுகமாக இருப்பது, குறைந்த எரிபொருள் செலவில் அதிக தூரம் பயணிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வுகளை உருவாக்கும்.

Article Published On: Sunday, August 23, 2026, 14:45 [IST]
English summary
Kia hybrid cars india seltos sonet carens sorento carnival launch timeline
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X