மாருதி கம்பெனிக்கே ஒரு சமயத்தில் பயத்தை காட்டிய கியா கார்! கொரியா காரன் உருவாக்கியதிலேயே தரமான படைப்பு!
கியா இந்தியா (Kia India) நிறுவனம், அதன் புகழ்மிக்க எஸ்யூவி (SUV) ரக கார் மாடலான செல்டோஸ் (Seltos)-ஐ இந்தியாவில் 6 லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2019இல் இந்திய சந்தையில் கியா நுழைந்ததுமே அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, அதிகம் போட்டி நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார்கள் பிரிவில் நிலைத்து நின்று இந்த சாதனையை செல்டோஸ் நிகழ்த்தியுள்ளது.
இது வாடிக்கையாளர் மத்தியில் செல்டோஸ் மீதுள்ள நிலையான நம்பிக்கையையும், அதன் சிறப்பான செயல்திறனையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் கியாவின் வளர்ச்சிக்கு செல்டோஸ் ஒரு முக்கிய தூணாக செயல்பட்டு வருகிறது. கம்பீரமான உலகளாவிய வடிவமைப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதிகள், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் எஸ்யூவி கார் சந்தையில் செல்டோஸ் அடியெடுத்து வைத்தது.

காலப்போக்கில், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் சொகுசு அம்சங்களில் தொடர்ச்சியான மேம்பாடுகளை செல்டோஸ் பெற்று வந்துள்ளது. 6 இலட்சம் செல்டோஸ் கார்கள் விற்பனை என்கிற இந்த விற்பனைச் சாதனையில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மொத்த விற்பனையில் 29% செல்டோஸின் விலைமிக்க உயர்ரக வேரியண்ட்கள் ஆகும்.
இது பிரிமியம் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மீது இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பம் அதிகரிப்பதைக் காட்டுகிறது. மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS), வலுவான கனெக்டிவிட்டி தீர்வுகள் மற்றும் முழுமையான பாதுகாப்புத் தொகுப்புகள் ஆகியவற்றை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் செல்டோஸ் பிரபலமாக்கியுள்ளது. அதேசமயம், இந்த காரின் என்ட்ரி லெவல் மற்றும் நடுத்தர ரக வேரியண்ட்களிலும் நிலையான தேவை காணப்படுகிறது.

மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் செல்டோஸ் ஒரு புதிய வரையறையை உருவாக்கியுள்ளது என கியா கூறுகிறது. வழக்கமாக காரின் உயர் ரக வேரியண்ட்களில் காணப்படும் அம்சங்களை நடுத்தர வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தியதன் மூலம், ஹேட்ச்பேக், செடான் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி ரக கார் மாடல்களில் இருந்து மேம்பட்ட அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு செல்டோஸ் கவர்ச்சிகரமான தேர்வாக மாறியது.
புதிய தலைமுறை செல்டோஸ் கார், கியா இந்தியா நிறுவனத்தின் அடுத்த கட்ட பயணத்திற்கு தலைமை தாங்கும் வகையில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் மாடலானது 4,460 மிமீ நீளம், 1,830 மிமீ அகலம் மற்றும் 2,690 மிமீ வீல்பேஸ் நீளத்துடன் பெரிய இடவசதியையும், சாலைகளில் சிறந்த தோற்றத்தையும் வழங்குகிறது.
இது மேம்படுத்தப்பட்ட ADAS தொகுப்பு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பு, சிறந்த கேபின் தொழிற்நுட்பம் மற்றும் விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் இன்டர்ஃபேஸ்களை அறிமுகப்படுத்துகிறது. அதே சமயம், வாடிக்கையாளர்கள் விரும்பும் பல பவர்ட்ரெய்ன் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம், செல்டோஸின் சமீபத்திய மாத விற்பனை எண்ணிக்கைகள் அதன் வலுவான தேவையை பிரதிபலிக்கின்றன.
2026 ஜனவரி மாத விற்பனையில், அதிகம் போட்டி நிறைந்த 4.2மீ- 4.5மீ எஸ்யூவி கார்கள் பிரிவில் கியா செல்டோஸ் 3வது இடத்தைப் பிடித்தது. இந்த எஸ்யூவி 10,639 யூனிட்கள் விற்பனையைப் பதிவு செய்து, 2025 ஜனவரியில் 6,470 யூனிட்கள் விற்பனையானதுடன் ஒப்பிடுகையில், 64.44% எனும் வலுவான ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை அடைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 6 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி, மேம்படுத்தப்பட்ட மாடலின் சமீபத்திய சிறந்த வரவேற்புடன், மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் கியாவின் வியூகத்திற்கு செல்டோஸ் தொடர்ந்து அடித்தளமாக உள்ளது. இந்த மைல்கல் கடந்த கால வெற்றியை மட்டுமில்லாமல், இந்தியாவில் கியா நிறுவனம் அடுத்த வளர்ச்சி கட்டத்திற்குள் நுழையும்போது நிலையான தேவைக்கான தளத்தையும் அமைக்கிறது.


Click it and Unblock the Notifications








