இந்திய கார் மார்க்கெட்டை ஆட்டி படைக்கும் அளவுக்கு நிலைமை மாறிடுச்சு! கொரியன் கம்பெனியா ஹூண்டாய் மட்டும் இல்ல!

கியா இந்தியா (Kia India) நிறுவனம், 2026 ஜனவரியில் சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. செல்டோஸ் (Seltos) மற்றும் சொனெட் (Sonet) கார் மாடல்கள் நிறுவனத்தின் அதிக விற்பனையாகும் கார்களாகத் தொடர்கின்றன. இந்த இரு மாடல்களும் 2025 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) மற்றும் 2025 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் மாதந்தோறும் (MoM) விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளன.

வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல விதமான பிரிவுகளில் அம்சம் நிறைந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மாடல்களை வழங்குவதற்கான கியாவின் யுக்தி தொடர்ந்து பலனளிக்கிறது. செல்டோஸ், சொனெட், கேரன்ஸ் கிளாவிஸ் (Carens Clavis), சைரோஸ் (Syros) மற்றும் கார்னிவல் (Carnival) போன்ற கியா கார்கள், கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய பயணிகள் வாகன நிறுவனங்கள் பட்டியலில் கியாவை 6வது இடத்திற்கு உயர்த்தியுள்ளன.

kia india cars-wise sales report

இதன் மூலம், கியா 6.1% சந்தைப் பங்கையும் பெற்றுள்ளது. 2026 ஜனவரியில் கியா நிறுவனம் மொத்தம் 27,603 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2025 ஜனவரியில் விற்பனையான 25,025 கியா கார்களுடன் ஒப்பிடுகையில் 10.3% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை காட்டுகிறது. மேலும், 2025 டிசம்பரில் விற்பனையான 18,659 கியா கார்களுடன் ஒப்பிடுகையில், இது 47.9% என்கிற ஒரு பெரிய வளர்ச்சியாகும்.

கியா நிறுவனத்தின் விற்பனைப் பட்டியலில் சொனெட் முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் 10,998 சொனெட் கார்கள் விற்பனையாகி உள்ளன. சொனெட் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. 2025 ஜனவரியில் 7,194 சொனெட் கார்கள் விற்பனையான நிலையில், இது 53% ஆண்டுக்கு ஆண்டு என்கிற ஒரு வலுவான வளர்ச்சியாகும்.

kia india cars-wise sales report

மாதாந்திர விற்பனையிலும் சொனெட் 17% வளர்ச்சியுடன் கடந்த ஜனவரியை நேர்மறையாக முடித்துள்ளது. ஏனெனில், 2025 டிசம்பரில் 9,418 சொனெட் கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. அடுத்ததாக, புதிய தலைமுறை செல்டோஸ் நாடெங்கிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் செல்டோஸின் விற்பனை 2025 ஜனவரியை விட 64% அதிகரித்து 10,639 யூனிட்களை எட்டியுள்ளது.

2025 டிசம்பரில் 4,369 செல்டோஸ் கார்கள் விற்பனையான நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் சுமார் 144% அதிகரிப்புடன் மிகச்சிறப்பான வளர்ச்சியை செல்டோஸ் பதிவு செய்துள்ளது. 2026 கியா செல்டோஸ், அதன் நிகரற்ற மதிப்பு காரணமாக நடுத்தர எஸ்யூவி (SUV) ரக கார்கள் பிரிவை அதிர வைத்திருக்கிறது. கியா கேரன்ஸ் கிளாவிஸ் மற்றும் அதன் இவி (EV) மாடல்களுக்கும் கடந்த மாதத்தில் நேர்மறையான வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த மாதம் 5,633 கேரன்ஸ் கிளாவிஸ் கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 2025 ஜனவரியில் பதிவான 5,522 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 2% என்கிற ஒரு சிறிய உயர்வாகும். 2025 டிசம்பரில் 3,681 கேரன்ஸ் கிளாவிஸ் கார்கள் விற்பனையான நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த மாத விற்பனை 53% அதிகமாகும்.

Kia Jan-26 Jan-25 Diff % Change YoY
Sonet 10,998 7,194 3,804 52.88
Seltos 10,639 6,470 4,169 64.44
Carens Clavis / EV 5,633 5,522 111 2.01
Syros 275 5,546 -5,271 -95.04
Carnival 58 293 -235 -80.20
Total 27,603 25,025 2,578 10.30
Kia Jan-26 Dec-25 Diff % Change MoM
Sonet 10,998 9,418 1,580 16.78
Seltos 10,639 4,369 6,270 143.51
Carens Clavis / EV 5,633 3,681 1,952 53.03
Syros 275 1,116 -841 -75.36
Carnival 58 75 -17 -22.67
Total 27,603 18,659 8,944 47.93

கியா சிரோஸ் (Syros) காரின் விற்பனை அதன் அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவில் சரிவை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் கவனத்தை ஈர்த்த போதிலும், இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி காரின் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளது. 2026 ஜனவரியில் 275 யூனிட்களாக விற்பனை சரிந்தது, இது 2025 ஜனவரியின் 5,546 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 95% வீழ்ச்சியாகும்.

மாதாந்திர விற்பனையிலும் 2025 டிசம்பரின் 1,116 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 75% சரிவு ஆகும். சிரோஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை கியா நிறுவனம் தற்போது தீவிரமாக சோதனை செய்து வருகிறது. இது வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கியா தனது தயாரிப்பு பட்டியலில் கார்னிவலையும் வைத்துள்ளது. ஆனால் அதற்கும் தேவை குறைவாகவே உள்ளது. கடந்த மாதம் 58 யூனிட்கள் மட்டுமே கார்னிவல் விற்பனையாகி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென் கொரியாவில் இருந்து வந்து இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய கார் நிறுவனங்களில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்திற்கு அடுத்து கியா கவனத்தை ஈர்த்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் மாதங்களில் இந்தியாவின் தவிர்க்க முடியாத கார் நிறுவனங்களுள் ஒன்றாக கியா உருவெடுத்துவிடும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Saturday, February 14, 2026, 14:36 [IST]
English summary
Kia india cars wise sales report of january 2026 sonet seltos and carens clavis top on list
மேலும்... #kia motors #kia sonet #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+