மாருதி கார்களுக்கு சமமாக விற்பனை ஆகும் கியா கார்கள்... ஜூனில் மட்டும் இத்தனை பேரா!!

தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை இந்தியாவில் வெகுவாக முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 24 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வழக்கத்தை காட்டிலும் கூடுதலா அல்லது குறைவா என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கியா நிறுவனம் இந்தியாவில் சமீப காலங்களில் புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் சிரோஸ் கார்கள் மூலமாக குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்சனையும் கியா அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், செல்டோஸ் மற்றும் சொனெட் கார்கள் தான் இந்திய சந்தையில் கியாவின் நம்பிக்கைக்குரிய கார்களாக இன்னமும் தொடர்கின்றன.

kia india cars-wise sales

இது கடந்த ஜூன் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 552 கார்களை இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில், செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 75%-க்கும் மேல் ஆகும். அதாவது, இந்தியாவில் கியா காரை வாங்குவோரில் 3இல் 2 பேர் செல்டோஸ் அல்லது சொனெட் காரை தான் வாங்குகின்றனர்.

இந்த கியா கார்களின் விற்பனை எண்ணிக்கையை பற்றி பார்ப்பதற்கு முன்னர், கியாவின் மொத்த விற்பனை எந்த அளவிற்கு பதிவாகி உள்ளது என்பதை பார்ப்போம். கடந்த ஜூன் மாதத்தில் 24,552 கியா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இது கடந்த 2025ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தை காட்டிலும் 19.04%, அதாவது 3,927 யூனிட்கள் அதிகமாகும்.

kia india cars-wise sales

அதாவது, 3,927 கார்களை நடப்பாண்டு ஜூன் மாதத்தில் கியா நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இருப்பினும், கடந்த 2026 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கியா கார்களின் விற்பனை 3,034 யூனிட்கள் குறைந்துள்ளது. ஏனெனில், கடந்த மே மாதத்தில் 27 ஆயிரத்து 586 கியா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஏற்கனவே கூறியதுபோல், கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார்களாக செல்டோஸ் மற்றும் சொனெட் விளங்குகின்றன. இதில் செல்டோஸ் கடந்த மாதத்தில் 9 ஆயிரத்து 654 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் 4,429 யூனிட்கள் குறைவாகும். ஏனெனில், 2025 ஜூன் மாதத்தில் 5 ஆயிரத்து 225 செல்டோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்து 597 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், செல்டோஸ் கார்களின் விற்பனை 943 யூனிட்கள் குறைந்துள்ளது. செல்டோஸ் காருக்கு அடுத்த நிலையில் உள்ள சொனெட் கடந்த மாதத்தில் 9 ஆயிரத்து 231 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது, 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் 2,573 யூனிட்கள் அதிகம் என்றாலும், 2026 மே மாதத்தை காட்டிலும் 476 யூனிட்கள் குறைவாகும். இவற்றிற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் 4 ஆயிரத்து 847 யூனிட்கள் விற்பனை உடன் கேரன்ஸ் க்ளாவிஸ் கார் உள்ளது. இருப்பினும், இதன் விற்பனை வழக்கத்தை காட்டிலும் குறைவு என்பதையும், கியா சிரோஸ் மற்றும் கார்னிவல் கார்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகளை பற்றியும் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Kia Model Jun-26 Jun-25 Diff % Change YoY
Seltos 9,654 5,225 4,429 84.77
Sonet 9,231 6,658 2,573 38.65
Carens Clavis / EV 4,847 7,921 -3,074 -38.81
Syros 790 774 16 2.07
Carnival 30 47 -17 -36.17
Total 24,552 20,625 3,927 19.04
Kia Model Jun-26 May-26 Diff % Change MoM
Seltos 9,654 10,597 -943 -8.90
Sonet 9,231 9,707 -476 -4.90
Carens Clavis / EV 4,847 6,208 -1,361 -21.92
Syros 790 961 -171 -17.79
Carnival 30 113 -83 -73.45
Total 24,552 27,586 -3,034 -11.00

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களின் விற்பனை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது என கூறினாலும், உண்மையில் இவை இரண்டின் விற்பனை கடந்த மே மாதத்தை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், கடந்த மே மாதத்தை காட்டிலும் அனைத்து கியா கார்களின் விற்பனையும் குறைந்துள்ளதை மேலே உள்ள அட்டவணையில் காணலாம்.

Article Published On: Tuesday, July 14, 2026, 11:20 [IST]
English summary
Kia india cars wise sales report of june 2026 seltos sonet carens clavis syros
மேலும்... #kia motors #car sales #kia seltos #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out