டாடா, மஹிந்திராவை நெருங்கும் கியா! கொரியன் கார் கம்பெனிக்கு ஒரே மாதத்தில் 27 ஆயிரம் கஸ்டமர்ஸ்!

கியா இந்தியா நிறுவனம் கடந்த மே மாத கார்கள் விற்பனையில் 24% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2019ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்த கியா நிறுவனம் இதுவரையில் மே மாதத்தில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையிலேயே கடந்த மே மாதத்தில்தான் அதிக எண்ணிக்கை பதிவாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் நடந்து முடிந்த கடந்த 2026 மே மாதத்தில் மொத்தம் 27 ஆயிரத்து 586 கார்களை விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டில் இதே மே மாதத்தில் வெறும் 22 ஆயிரத்து 315 கார்களை மட்டுமே கியா விற்பனை செய்திருந்தது.

kia india 2026 may car sales

இந்த வகையில் பார்க்கும்போது, கியா கார்களின் விற்பனை ஆனது கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் சுமார் 23.62%, அதாவது 5,271 யூனிட்கள் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தை போன்று, கடந்த ஏப்ரல் மாதத்திலும் 27 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இருப்பினும், துல்லியமாக பார்த்தால் ஏப்ரலை காட்டிலும் கடந்த மே மாதத்தில் 300 கியா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 ஆயிரத்து 286 கார்களை மட்டுமே கியா விற்பனை செய்திருந்தது. ஒட்டுமொத்தமாக நடப்பு 2026ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 197 கார்களை கியா விற்பனை செய்துள்ளது.

kia india 2026 may car sales

அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 514 கார்களை மட்டுமே இந்தியாவில் கியா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கியா கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது சுமார் 17 ஆயிரத்து 683 யூனிட்கள் அதிகரித்துள்ளது. அதாவது, 17,683 கியா கார்கள் கடந்த 5 மாதங்களில் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு செல்டோஸ் மற்றும் சொனெட் கார்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. அதேபோல், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேரன்ஸ் கிளாவிஸ், கிளாவிஸ் இவி மற்றும் சிரோஸ் கார்களின் பங்களிப்பும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, கியா செல்டோஸின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது.

ஏனெனில், ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான கியா செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கேற்ப இந்த 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் செல்டோஸ் அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல், கியா சொனெட் காரும் இந்தியாவின் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கியா செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களை அதிக பேர் வாங்குவதற்கு முக்கிய காரணம், இந்த எஸ்யூவி கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும், சமீபத்தில் அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட 2026 சிரோஸ் காரை வாங்குவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் மாத விற்பனை எண்ணிக்கைகள் உடன் ஒப்பிடுகையில் கியாவின் விற்பனை எண்ணிக்கை குறைவானதாக தோன்றலாம். ஆனால், கியாவிற்கு முக்கியமான கார் சந்தைகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த சில மாதங்களாக கியாவின் விற்பனை எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டுவதால், வரும் மாதங்களில் 30 ஆயிரம் என்கிற மைல்கல்லை தாண்டுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

Article Published On: Tuesday, June 2, 2026, 15:26 [IST]
English summary
Kia india sold 27586 cars in may 2026 in india strong demand for seltos and sonet
மேலும்... #kia motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out