கிரெட்டாவுக்கு போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ்யூவியின் புதிய வேரியன்ட்கள் வெளியாகியுள்ளது

கியா நிறுவனம் இந்த 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் தான் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை செல்டோஸ் எஸ்யூவியை வெளியிட்டது. K3 என்ற புதிய பிளாட்ஃபார்மில், முன்பை விட சற்று பெரிதாக, முன்பை விட கூடுதல் வசதிகளுடன் புதிய செல்டோஸ் வெளியானது. இந்த அப்டேட்டிற்குப் பின்பு இந்த எஸ்யூவியின் விற்பனை நன்கு உயர்ந்துள்ளது. தற்போது கிரெட்டா மற்றும் விக்டோரிஸுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் மிட்-சைஸ் எஸ்யூவியாக செல்டோஸே உள்ளது.

இந்நிலையில் இந்தக் காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் பொருட்டும், வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தேர்வுகளை வழங்கும் பொருட்டும், கூடுதல் வசதிகள் கொண்ட புதிய வேரியன்ட்களை வெளியிட்டுள்ளது கியா. இதுவரை HTE, HTE(O), HTK, HTK(O), HTX, HTX (A), GTX, X Line, GTX (A) மற்றும் X Line (A) எனப் பத்து வேரியன்ட்களாக செல்டோஸ் எஸ்யூவியை கியா விற்பனை செய்து வந்தது.

Kia Seltos

தற்போது புதிதாக GTX (O) மற்றும் X Line (O) ஆகிய இரண்டு புதிய டாப் எண்டு வேரியன்ட்களை கூடுதல் வசதிகளுடன் வெளியிட்டுள்ளது. கியா செல்டோஸின் லைன்-அப்பிலேயே விலை உயர்ந்த வேரியன்ட்களாக இனி இந்தப் புதிய வேரியன்ட்களே இருக்கும். இதுவரை GTX (A) மற்றும் X Line (A) ஆகிய இரண்டு வேரியன்ட்களும் 19.82 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

இந்நிலையில் புதிய GTX (O) மற்றும் X Line (O) ஆகிய இரண்டு வேரியன்ட்களும் முந்தைய டாப் எண்டு வேரியன்ட்களை விட ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் கூடுதாக 21.57 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளன. GTX (O) மற்றும் X Line (O) ஆகிய இரண்டு வேரியன்ட்களுமே ஒரே எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே விற்பனை செய்யப்படவுள்ளன.

Kia Seltos

புதிதாகக் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள் என்னென்ன?

இந்தக் கூடுதல் விலைக்கு புதிய வேரியன்ட்களில், விண்டுஸ்கிரீன் ப்ரொஜெக்ஷனுடன் கூடிய ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, AQI டிஸ்பிளேவுடன் கூடிய ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர், முன்பக்க மற்றும் பின்பக்க வியூவை சேர்த்து பதிவு செய்யும் ஸ்மார்ட் டேஷ்கேம், வாய்ஸ் கமாண்டு மற்றும் பில்ட்-இன் நேவிகேஷனுக்கு பிராந்திய மொழிகளைப் பயன்படுத்தும் அம்சம் உள்ளிட்ட புதிய வசதிகளை புதிய டாப் எண்டு செல்டோஸ் வேரியன்ட்களில் கொடுத்துள்ளது கியா.

பாதுகாப்பிற்காக ஏற்கனவே முந்தைய டாப் எண்டு வேரியன்ட்களில் லெவல் 2 ADAS கொடுக்கப்பட்டு வரும் நிலையில், புதிய வேரியன்ட்களில் இன்னும் மேம்பட்ட ADAS F+ சூட் வசதியை கியா கொடுத்துள்ளது. 28 விதமான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக புதிய ADAS F+ சூட் இருக்கிறது.

குறிப்பாக ஃப்ரண்ட் கொலிஷன் அவாய்டன்ஸ்- அசிஸ்ட் ஜங்ஷன் கிராஸிங் (FCA-JC), FCA- லேன் சேஞ்சு ஆன்கமிங் (FCA-LO), FCA- லேன் சேஞ்சு சைடு (FCA-LS), FCA வித் எவேஸிவ் ஸ்டீயரிங் அசிஸ்ட் அசிஸ்ட் (FCA-ESA), நேவிகேஷன் அடிப்படையிலான ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் ஸோன் மற்றும் கர்வ், ஹைவே டிரைவிங் அசிஸ்ட் உள்ளிட்ட புதிய ADAS பாதுகாப்பு அம்சங்கள் புதிய வேரியன்ட்களில் வழங்கப்ட்டிருக்கின்றன.

இந்த மேம்பாடுகளானது செல்டோஸின் விற்பனை வரும் மாதங்களில் மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாருதி விக்டோரிஸுக்கு இணையாக மாதம் 10,000 யூனிட்டுகள் என்ற அளவில் செல்டோஸ் விற்பனையாகி வருகிறது. இந்த மேம்பாடுகளுடன் ஹூண்டாய் கிரெட்டாவிற்கே செல்டோஸ் டஃப் கொடுத்தாலும் ஆச்சரிமில்லை. விரைவில் கிரெட்டாவும் இதே போலவே புதிய பிளாட்ஃபார்ம் மற்றும் அம்சங்களுடன் மேம்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தப் புதிய அம்சங்களுடன் முன்பை விட இன்னும் தரமான போட்டியாளராக செல்டோஸை மாற்றியிருக்கிறது கியா. மேலும், புதிய டாப் எண்டு வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், வாடிக்கையாளர்களைக் குழப்பாமல், கொடுக்க வேண்டிய அப்டேட்களைக் கொடுத்துள்ளது. இந்த வசதிகள் எல்லாம் கண்டிப்பாக இருந்த ஆக வேண்டும் என்பதை கிடையாது, ஆனால் இருந்தால் நன்றாக இருக்கும் என்பவையே.

Article Published On: Wednesday, July 1, 2026, 13:55 [IST]
English summary
Kia launched new top end variants in seltos lineup with new features
மேலும்... #kia motors #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out