500கிமீ-க்கு சார்ஜ் பற்றி யோசிக்கவே தேவை இருக்காது... கியா கம்பெனி இந்தியாவில் செய்ய போகும் தரமான சம்பவம்!

கியா நிறுவனம் இந்திய சந்தைக்கான அதன் சிரோஸ் இவி எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளது. மேலும், காருக்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டுள்ளன. இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த புதிய கியா எலெக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

கியா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எலெக்ட்ரிக் கார், சிரோஸ் இவி ஆகும். பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் சிரோஸ் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், அவற்றின் எலெக்ட்ரிக் வெர்சனாக சிரோஸ் இவி களமிறக்கப்படுகிறது. இது கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் தரத்திலான SUV ரக கார் ஆகும்.

new kia syros ev electric car

ஏற்கனவே கூறியதுபோல், இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இந்த புதிய கியா எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளன. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 என்கிற முன்தொகையில் இந்த காரை முன்பதிவு செய்யலாம். கியாவின் K1 பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிரோஸ் இவி காரின் தோற்றம் கிட்டத்தட்ட பெட்ரோல்/ டீசல் சிரோஸ் காரை ஒத்துக் காணப்படுகிறது.

இதனால், புலி மூக்கு டிசைனிலான முன்பக்கம், ஸ்டார் மேப் LED DRL-கள் உடன் பனிக்கட்டி வடிவிலான LED ஹெட்லைட்கள் & டெயில்லைட்கள் மற்றும் பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவை சிரோஸ் இவி எலெக்ட்ரிக் காரிலும் தொடரப்பட்டுள்ளன. இந்த காரில் 17 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ள ஏரோ சக்கரங்கள் இரு நிறங்களில் உள்ளன.

new kia syros ev electric car

இது எலெக்ட்ரிக் கார் என்பதால், பொனெட்டிற்கு அடியில் என்ஜின் வழங்கப்படும் இடத்தில் 16 லிட்டர்கள் கொள்ளளவில் ஃபிரங்க் பகுதி வழங்கப்பட்டுள்ளது. புதிய சிரோஸ் இவி காரின் உட்புறத்தில் 30 இன்ச்சில் நன்கு அகலமான பனோராமிக் சன்ரூஃப், டாஷ்போர்டில் 12.3 இன்ச்சில் தொடுதிரை & 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் 5 இன்ச்சில் க்ளைமேட் கண்ட்ரோல் திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், கேபினை சுற்றிலும் விளக்குகள், 4 வழிகளில் பவர் அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, நகர்த்த & மடிக்கக்கூடிய பின் இருக்கை, டாஷ்ஃபோர்டு கேமரா, 360-டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 ADAS உள்ளிட்டவையும் சிரோஸ் இவி காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் இரு பேட்டரி ஆப்ஷன்களாவன, 42kWh மற்றும் 51.4kWh ஆகும்.

இதில் 42kWh பேட்டரி ஆனது அதிகப்பட்சமாக 443கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாகவும், 51.4kWh பேட்டரி 526கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாகவும் உள்ளது. எந்த பேட்டரி உடன் வாங்கினாலும் காரில் ஒரேயொரு எலெக்ட்ரிக் மோட்டார் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 169 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை எட்ட குறைந்தப்பட்சம் 8.1 வினாடிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் சிரோஸ் இவி காருடன் 10.8 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜர் ஆன்போர்டாக வழங்கப்படும் என கியா அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, 100 கிலோவாட்ஸ் வரையில் திறன் கொண்ட டிசி ஃபாஸ்ட் சார்ஜரையும் சிரோஸ் இவி பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி வெறும் 39 நிமிடங்களில் 80% சார்ஜ் நிரப்பிவிடலாம் என கூறப்படுவதால், கியா சிரோஸ் இவி அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் காராக இருக்கும். மேலும், இந்த காரின் பேட்டரிக்கு முழு ஆயுட்கால உத்தரவாதம் வழங்கப்படுவதால், தைரியமாக இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கலாம்.

Article Corrections

புதிய கியா சிரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் படங்கள் பெறப்பட்ட இணையத்தளம் குறிப்பிடப்பட்டது.
Article Published On: Wednesday, July 15, 2026, 23:24 [IST]
English summary
Kia motor unveils new syros ev electric car in india design features battery range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out