9 பேர் செல்லலாம்... 5.35 மீட்டர் நீளம்... கியா அறிமுகப்படுத்திய பிரம்மாண்ட எலெக்ட்ரிக் வேன்!

மின்சார வாகன சந்தையில் கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கு அடுத்தபடியாக, எம்பிவி ரக பயணிகள் வாகனங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தினர் ஒன்றாக பயணிப்பதற்கு ஏதுவான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கி உள்ளனர். இதனை மனதில் வைத்து கியா மோட்டார் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் வேனை அறிமுகம் செய்துள்ளது.

ஜெர்மனி நாட்டின் ஹானோவர் நகரில் நடைபெறும் IAA Transportation 2026 என்ற வாகன கண்காட்சியில் கியா நிறுவனம் PV7 என்ற பேட்டரியில் இயங்கும் பயணிகள் வேனை காட்சிப்படுத்தி உள்ளது. இது கியாவின் PBV (Platform Beyond Vehicle) என்ற பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்ட இரண்டாவது முழுமையான எலெக்ட்ரிக் மாடலாக வந்துள்ளது. இதற்கு முன்னர் PV5 என்ற மாடலை கியா அறிமுகப்படுத்தியிருந்தது.

KIA PV7 EV Van

நீளமான வேன்

புதிய பிவி7 பயணிகள் வேன் 5,350 மிமீ நீளமும், 1,995 மிமீ அகலமும், 1,990 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல்பேஸ் 3,500 மிமீ ஆக உள்ளதால், இதில் 9 பேர் வரை பயணிக்கும் வகையில் நான்கு வரிசை இருக்கை அமைப்பை பெற்றுள்ளது. மேலும், பயணிகள் சவுகரியமாக பயணிக்கும் வகையிலும், சரக்கு வணிக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சமதளமான தரை தளத்துடன் வடிவமைக்கப்பட்டு இருப்பது மற்றொரு சிறப்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Also Read

இந்த புதிய எலெக்ட்ரிக் வேன் மாடலை சுற்றுலா, பணியாளர் போக்குவரத்து, குடும்ப பயன்பாடு என பல்வேறு விதத்திலும் வாடிக்கையாளர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு செல்ல இருக்கும் இந்த புதிய வேனில் 9 பேர் சவுகரியமாக அமர்ந்து செல்ல முடியும்.

KIA PV7 EV Van

அதேநேரத்தில், தன் தாய் நாடான கொரியாவில் இந்த கார் 11 பேர் அமரும் இருக்கை அமைப்புடனும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வாடிக்கையாளர் விருப்பத்தை பொறுத்து 7 பேர் செல்வதற்கான மூன்று வரிசை இருக்கை அமைப்புடனும் இந்த வேன் கிடைக்கும். கடைசி வரிசை பயணிகள் வரை சிறப்பான குளிர்ச்சியை பெறும் வகையில் ஏசி சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது சரக்குப் போக்குவரத்துக்கான கார்கோ மாடலிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

Also Read

இரண்டு பேட்டரி தேர்வுகள்

புதிய கியா பிவி7 எலெக்ட்ரிக் வேனில் 71.5 kWh மற்றும் 96.2 kWh என இரண்டு விதமான திறன் கொண்ட NCM பேட்டரி பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டு சந்தை மற்றும் வேரியண்ட்டை பொறுத்து அதிகபட்சமாக 200 kW பவர் மற்றும் 420 Nm டார்க் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் இடம்பெறுகிறது.

சரக்கு போக்குவரத்திற்கான Long Range Cargo மாடலானது WLTP சோதனை முறையில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 460 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் என கியா மோட்டார் தெரிவித்துள்ளது. முன்சக்கரங்களுக்கு சக்தியை செலுத்தும் ஃப்ரண்ட் வீல் டிரைவ் அமைப்பு ஆரம்பத்தில் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் அனைத்து சக்கரங்களுக்கும் பவரை வழங்கும் AWD பதிப்பும் அறிமுகமாக உள்ளது.

KIA PV7 EV Van

இந்த எலெக்ட்ரிக் வேனில் உள்ள பேட்டரியானது 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தும்போது, 10 முதல் 80 சதவீதம் வரை 20 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். மேலும், V2L வசதி இருப்பதால் வெளிப்புற மின்சாதனங்கள் மற்றும் பணிக்குத் தேவையான உபகரணங்களுக்கு வாகனத்தின் பேட்டரியிலிருந்து மின்சாரத்தை பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலும் இதுபோன்ற அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான பயணிகள் வாகனங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. டெம்போ டிராவலர், அர்பானியா, டாடா விங்கர் போன்ற வாகனங்கள் இந்த ரகத்தில் கோலோய்ச்சி வந்தாலும், இன்னோவா ஹைகிராஸ் மேலாகவும், டெம்போ டிராவலரைவிட எம்பிவி ரகத்தில் எளிமையான கையாளுமை கொண்ட எலெக்ட்ரிக் வேனாக இருக்கும் என்பதால், நிச்சயம் இந்தியாவுக்கும் பரிசீலிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

Article Published On: Wednesday, September 16, 2026, 9:17 [IST]
English summary
Kia pv7 electric van showcased germany 9 seater 5 35m length 460km range features
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X