2.80 லட்சம் பேர் இந்த கம்பெனி காரை நம்பி வாங்கிட்டாங்க! 365 நாளில் நடந்த அதிசயம்!
2026ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த டிசம்பர் மாதம் மற்றும் 2025ம் ஆண்டிற்கான விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கியா நிறுவனம் தனது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்கை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 18,659 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெறும் 8957 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த நவம்பர் மாதம் 25,489 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

கடந்த டிசம்பர் மாத விற்பனையை ஒப்பிட்டால் கடந்தாண்டு டிசம்பர் மாத விற்பனையை விட 9702 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 108.32 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது. இதுவே கடந்த நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 6830 வாகனங்கள் குறைவாக விற்பனையாகி 26.80 சதவீத விற்பனை வீழ்ச்சியை பெற்றுள்ளது.
இந்நிறுவனம் கடந்த 2025ம் காலாண்டர் ஆண்டிற்கான விற்பனை விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 2,80,286 வாகன்ஙகள் கடந்த 2025ம் ஆண்டு விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டில் 2,45,000 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 35,286 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இது 14.40 சதவீத வளர்ச்சியை பெற்று தந்துள்ளது.

கியா நிறுவனத்தின் சோனட் கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து 2வது ஆண்டாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகி புதிய சாதனை மைல்கல்லை படைத்துள்ளது. அடுத்த இடத்தில் செலடோல் கார் இருக்கிறது. இது போக கியா கியா கேரன்ஸ், கேரன்ஸ் கிளாவிஸ், இது போக பிரிமியம் கார்களாக கார்னிவெல் லிமோஷைன், இவி 6 ஆகிய கார்களும் மார்கெட்டில் உள்ளது.
இந்நிறுவனம் 369 நகரங்களில் 821 பகுதிகளில் ஷோரூம்களை வைத்து வாகனங்களை விற்பனை செய்து வருகுிறது. இந்த பெரிய நெட்வோர்க் இந்த நிறுவனத்தின் காரின் விற்பனையை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது விற்பனை வளர்ச்சி, சர்வீஸ் எக்கோ சிஸ்டம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான ரிசல்டாக பார்க்கப்படுகிறது.

கியா நிறுவனம் புதிய செல்டோஸ் காரை நாளை அதாவது ஜனவரி 2ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. அதற்கான விலை விபரங்களை நாளை தான் வெளியிடப்படடும். கியா நிறவமன் இந்த 2026ம் ஆண்டில் பல்வேறு புதிய கார்களை களம் இறக்குகிறது. மேலும் புதிய அப்டேட்களையும் கொண்டு வருகிறது. இந்நிறுவனம் அதன் தயாரிப்பு லைன் அப்களை விரிவாக்கி நெட்வொர்க்கை பெரிதாக்குகிறது.கியா நிறுவனம் புதிய செல்டோஸ் காரை நாளை அதாவது ஜனவரி 2ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. அதற்கான விலை விபரங்களை நாளை தான் வெளியிடப்படடும். கியா நிறவமன் இந்த 2026ம் ஆண்டில் பல்வேறு புதிய கார்களை களம் இறக்குகிறது. மேலும் புதிய அப்டேட்களையும் கொண்டு வருகிறது. இந்நிறுவனம் அதன் தயாரிப்பு லைன் அப்களை விரிவாக்கி நெட்வொர்க்கை பெரிதாக்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்தாண்டு நல்ல வளர்ச்சியை பெற்றள்ளது. வருட ஆரம்பத்தில் சற்று சறுக்கல்களை சந்தித்தாலும் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. 2026ம் ஆண்டு இது நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









