கொரியாகாரன் கையில கங்கணம் கட்டீட்டான்... அடிமாட்டு விலையில் விற்பனைக்கு வரப்போகும் புதிய எலெக்ட்ரிக் கார்!

தென் கொரியாவை சேர்ந்த கியா (Kia) நிறுவனம், இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தது. அதாவது கியா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்து, கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் மட்டுமே கடந்துள்ளன. ஆனால் தற்போது இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், 6வது இடத்தை கியா பிடித்துள்ளது.

முதல் 5 இடங்களில் மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), டாடா (Tata), மஹிந்திரா (Mahindra) மற்றும் டொயோட்டா (Toyota) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. கியா நிறுவனத்தின் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாகவே அந்நிறுவனம் மிகவும் குறுகிய காலத்தில் இந்திய சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.

Kia Sonet Side Design

கியா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. கியா நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27,610 கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இதுதான் கியா நிறுவனத்தின் அதிகபட்ச பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கை ஆகும். அதாவது இதற்கு முன்பாக வேறு எந்தவொரு பிப்ரவரி மாதத்திலும் கியா நிறுவனம் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்தது கிடையாது. இந்த சாதனையுடன் சேர்த்து, வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், விற்பனையில் சிறப்பான வளர்ச்சியையும் கியா நிறுவனம் பதிவு செய்துள்ளது.

Kia Sonet

அதாவது கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கியா நிறுவனம் 25,026 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 10.30 சதவீத வளர்ச்சியை கியா நிறுவனம் பதிவு செய்துள்ளது. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் மூலம் இது நமக்கு தெரிய வந்துள்ளது.

கியா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட், கியா செல்டோஸ், கியா சைரோஸ், கியா கார்னிவல், கியா கேரன்ஸ், கியா கேரன்ஸ் க்ளாவிஸ், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி, கியா இவி 6 மற்றும் கியா இவி 7 என 9 கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த வரிசையில் கூடிய விரைவில் கியா சைரோஸ் இவி இணையவுள்ளது. இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை கியா சைரோஸ் இவி பெறவுள்ளது. அனேகமாக கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 13 அல்லது 14 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா நிறுவனத்தின் கார்களில் அதிநவீன வசதிகள் தாராளமாக வழங்கப்படுகின்றன. அத்துடன் கியா நிறுவன கார்களின் டிசைன் மொழி வாடிக்கையாளர்களை கவர கூடியதாக உள்ளது. இது போன்ற காரணங்களால்தான், கியா நிறுவனம் இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான கார் நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 3, 2026, 21:07 [IST]
English summary
Kia sales report february 2026 10 per cent growth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+