பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகமான கியா செல்டோஸ் ஹைபிரிட்! இந்தியாவுக்கு எப்போது?

இந்தியாவில் ஹைபிரிட் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், கியா நிறுவனம் தனது புதிய தலைமுறை செல்டோஸ் ஹைபிரிட் காரை 2026 பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியுள்ளது. பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டார் இணைந்து செயல்படும் வகையிலான இந்த ஹைபிரிட் எஸ்யூவி கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா செல்டோஸ் காருக்கு ஏற்கனவே இந்தியாவில் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, இதில் ஹைபிரிட் தொழில்நுட்பம் அறிமுகமானால், குறைந்த எரிபொருள் செலவை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது புதிய தேர்வாக அமையும். இந்த கார் எப்போது இந்தியாவுக்கு வரும், இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

Kia Seltos Hybrid

முதல் தரிசனம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடந்து வரும் சர்வதேச மோட்டார் ஷோவில் இந்த புதிய தலைமுறை செல்டோஸ் ஹைபிரிட் காரை கியா நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான இந்த மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மின்மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இது இணைந்து அதிகபட்சமாக 178 எச்பி பவரை வெளிப்படுத்தும்.

இந்த காரின் முக்கிய சிறப்பம்சமாக மின்னணு ஆல் வீல் டிரைவ் (e-AWD) அமைப்பு இடம்பெற்றுள்ளது. இது சாலையில் வாகனத்தின் பிடிமானத்தையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்த உதவும். இருப்பினும், இந்தியாவில் அறிமுகமாகும் மாடலில் இதே தொழில்நுட்பம் இடம்பெறுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த கார் லிட்டருக்கு 14.71 கிமீ மைலேஜ் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், இந்த கார் பிளக் இன் ஹைபிரிட் மாடலாக இல்லாமல், கார் இயங்கும்போது ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்ப முறையில் பேட்டரியில் மின் ஆற்றல் சேமிக்கப்பட்டு மின் மோட்டார் இயக்கப்படும். அத்துடன், ஐரோப்பிய மாடலில் முன்புற சக்கரங்கள் பெட்ரோல் எஞ்சின் மூலமாகவும், பின்புற சக்கரங்கள் எலெக்ட்ரிக் மோட்டார் மூலமாக இயங்கும் வகையில் உள்ளது. இதனால், இது ஆல் வீல் டிரைவ் திறனை கொண்டிருப்பது முக்கிய அம்சமாக இருக்கிறது.

Also Read

இந்தியாவுக்கு எப்போது?

கியா செல்டோஸ் ஹைபிரிட் கார் இந்தியாவில் வரும் 2027ஆம் ஆண்டு பிற்பகுதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிமுகத் தேதியையோ, இந்திய மாடலின் தொழில்நுட்ப விவரங்களையோ கியா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

எனினும், இந்தியாவில் ஹைப்ரிட் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதுடன், செல்டோஸ் காரின் நேரடி போட்டியாளர்களாக உள்ள மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற மாடல்களில் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட வேரியண்ட்டுகள் விற்பனையில் உள்ளன. எனவே, கூடிய விரைவாக இந்த செல்டோஸ் ஹைப்ரிட் இந்தியாவிலும் வரும் என்று தெரிகிறது.

Also Read

பெட்ரோல் விலை அதிகரிப்பு, மின்சார கார்களுக்கான சார்ஜிங் செய்வதில் உள்ள நடைமுறை பிரச்னைகளுக்கு ஹைபிரிட் கார்கள் மாற்றுத் தேர்வாக உள்ளன. இதனால், ஹைபிரிட் கார்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், செல்டோஸ் ஹைபிரிட் இந்தியாவில் அறிமுகமானால் கியா நிறுவனத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவில் 1.5 லிட்டர் எஞ்சினுடன் செல்டோஸ் ஹைபிரிட் மாடல் வருவதற்கு வாய்ப்பு 100 சதவீதம் உறுதியாக கூற முடியும் என்பதுடன், இந்திய மாடல் சோதனை நிலைகளின்படி லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தரும் வகையில் தொழில்நுட்பத்தை பெறும் வாய்ப்பு இருப்பதால் இந்தியர்கள் மத்தியில் ஆவலை அதிகரிக்கச் செய்கிறது.

Article Published On: Tuesday, October 13, 2026, 16:06 [IST]
English summary
Kia seltos hybrid showcased paris motor show india launch timeline
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out