விலை இவ்வளவு குறைச்சல் தானா? கியா செல்டோஸ் கார் வந்தாச்சு!
கியா நிறுவனம் இன்று தனது செல்டோஸ் காரின் 2ம் தலைமுறை அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த காரின் உட்பகுதியில் வெளிப்பகுதியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த கார் ரூபாய் 10.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக செல்டோஸ் கார் இருக்கிறது. இந்த காரின் புதிய அப்டேட்டை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இது இரண்டாம் தலைமுறை அப்டேட் ஆகும். இந்த கார் ரூபாய் 10. 99 லட்சம் முதல் ரூ19.9 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் தயாரிப்பு ஏற்கனவே கியா நிறுவனத்தின் ஆனந்பூர் பகுதியில் உள்ள ஆலையில் துவங்கிவிட்டது. இந்த கார் குளோபல் கே3 என்ற பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட காராகும். இந்த கார் அதிக திறன் கொண்ட சிறப்பான டிரைவிங் அனுபவத்தை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த குளோபல் கே 3 என்ற பிளாட்பார்ம் அதிக பாதுகாப்பு அம்சங்களை தற்போது கொண்டுள்ளதாக இருக்கிறது. இதில் ஸ்டாண்டர்டான பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக உள்ளன. முக்கியமாக 6 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட், எலெக்ட்ரிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் யூனிட் அம்சங்கள் உள்ளன. டாப் வேரியண்டில் அடாஸ் சிஸ்டம் 21 அம்சங்களுடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் வெளிப்புறம் யூனைடெட் டிசைன் மொழி பின்பற்றப்பட்டுள்ளது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4460 மிமீ நீளம் கொண்டதாக இருக்கிறது. மேலும் நல்ல அகலம், அதிக வீல் பேஸ் கொண்டதாக இதன் வடிவமைப்பு இருக்கிறது. இந்த கார் ரோடு பிரசென்ஸ் சிறப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்டிலேயே முதல்முறையாக ஸ்டரீம் லைன் டோர் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் ஐஸ் க்யூப் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புதிய வடிவமைப்பில் அலாய் வீல்கள் ஆகியன இந்த காரின் லூக்கை மேலும் மேம்படுத்தி காட்டுகிறது. இந்த காரின் உள்ளே டிஜிட்டல் இண்டர்நேசனல் மார்க்கெட்டில் உள்ள தரத்திற்கு இணையாக வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக 75.18 சென்டிமீட்டர் கொண்ட பானராமிக் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது இன்போடைமென்ட் டிஸ்ப்ளேயாகவும் டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த காரின் உள்ளே போஸ் 8 ஸ்பீக்கர் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்கள் உள்ளன.
இந்த காரின் வேரியன்டை பொறுத்து முன்பக்க சீட்டுகள் வென்டிலேட்ட் சீட்டுகளாகவும், பத்து வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர்டு அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் மெமரி பங்க்ஷன் உடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரிலாக்ஸ் மோட் வெல்கம் ரெட்ராக்ட் பங்ஷனாலிட்டி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த கார் மொத்தம் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. அதன்படி 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பயர்டு பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ, 1.5 லிட்டர் சிஆர்டி டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளது.
கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் இதன்படி மேனுவல், ஐ எம் டி, ஐவிடி, டிசிபி மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆகிய கியர் பாக்ஸ் அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த கார் மொத்தம் நான்கு விதமான முக்கிய வேரியன்ட்களில் உள்ளது அதன்படி ஹச் டி இ, ஹச் டி கே, ஹெச் டி எச், மற்றும் ஜி டி எக்ஸ் அல்லது எக்ஸ் லைன் என வேரியன்ட்களுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா கார்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. கடந்தாண்டு நல்லவிற்பனையை பெற்றுள்ள நிலையில் அந்நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் ஒன்றான செல்டோஸ் கார் அப்டேட் செய்யப்பட்டது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இ்நத கார் குறித்த உங்கள் கருத்துக்கை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








