தஞ்சாவூர் கோயில் சிற்பம் மாதிரி பாத்து பாத்து செதுக்கியிருக்காங்க! குடுக்கற காசுக்கு மேலயே ஒர்த்தான கார்!
எஸ்யூவி கார்களுக்கான (SUV Cars) மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது. எனவே இங்கு ஏராளமான எஸ்யூவி கார்கள் விற்பனையாகி கொண்டுள்ளன. இதில், கியா செல்டோஸ் (Kia Seltos) மிகவும் முக்கியமானது. தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் இதுதான்.
எனவே செல்டோஸ் காரை கியா நிறுவனம் பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக எதிர்பார்க்கப்பட்டதை போலவே, கியா நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் நல்ல வலுவான அடித்தளத்தை செல்டோஸ் அமைத்து கொடுத்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக கியா செல்டோஸ் திகழ்கிறது.

இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் கியா செல்டோஸ் கார் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கியா நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 10,597 செல்டோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 74 சதவீத வளர்ச்சி ஆகும்.
இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 எஸ்யூவிக்களின் பட்டியலில் (Top 10 SUVs May 2026) கியா செல்டோஸ் 10வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 9 இடங்களில் முறையே மாருதி ஃப்ரான்க்ஸ், டாடா பன்ச், டாடா நெக்ஸான், மஹிந்திரா ஸ்கார்பியோ, ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, மாருதி விக்டோரிஸ், மஹிந்திரா தார் ஆகியவை உள்ளன.

காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை கியா செல்டோஸ் (New-gen Kia Seltos) கார், கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
கியா செல்டோஸ் காரின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு இதுவே மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின்படி கியா செல்டோஸ் காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் வெறும் 11 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பதால்தான் கியா செல்டோஸ் விற்பனையில் வெற்றி கொடி நாட்டி வருகிறது.
கியா செல்டோஸ் காரில், 21 வசதிகள் உடன் லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் ட்யூயல்-பேன் பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 360 டிகிரி கேமரா, 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே என ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் கியா செல்டோஸ் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் MPi பெட்ரோல், 1.5 லிட்டர் T-GDi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDi VGT டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி விக்டோரிஸ், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, டாடா சியரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் ஹோண்டா எலவேட் போன்ற கார்களுக்கு எல்லாம், கியா செல்டோஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்.


Click it and Unblock the Notifications