அதிக மைலேஜ் தரும் தரமான எஸ்யூவி இது தான்.. நாங்க சொல்லலை டேட்டா சொல்லுதுங்க!

மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை செல்டோஸ் எஸ்யூவி மாடலை இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியிட்டது கியா. 4.2 மீட்டர் முதல் 4.5 மீட்டர்களுக்குள்ளான எஸ்யூவிக்கள் பிரிவில், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி கிராண்டு விட்டாரா ஆகிய எஸ்யூவிக்களைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி வாங்கும் எஸ்யூவியாக கியா செல்டோஸ் இருந்து வருகிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியாவிற்கான தனித்த இடத்தைப் ஏற்படுத்திக் கொடுத்ததும் செல்டோஸ் தான். இந்த எஸ்யூவியை தான் முதன் முதலில் இந்திய சந்தையில் வெளியிட்டு வெற்றி கண்டது கியா. தற்போது மேம்படுத்தப்பட்டிருக்கும் இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலின் மைலேஜ் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து இங்கே நாம் விரிவாப் பார்க்கலாம்.

Kia Seltos

முதல் தலைமுறை செல்டோஸ் மாடலுடன் ஒப்பிடும் போது இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலில் மெக்கானிக்கலாக இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தக் காரில் 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று இன்ஜின் தேர்வுகளை கியா கொடுத்துள்ளது. ஒவ்வொரு இன்ஜினும் இரண்டு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேற்கூறிய மூன்று இன்ஜின் தேர்வுகளில் அதிக மைலேஜைக் கொடுப்பது செல்டோஸின் டீசல் இன்ஜின் தான். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொடுத்துள்ளது கியா. மேனுவல் கியர்பாக்ஸானது லிட்டருக்கு 19.4 கிமீ வரையிலான மைலேஜேயும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸானது லிட்டருக்கு 17.8 கிமீ வரையிலான மைலேஜும் கொடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Kia Seltos

இரண்டாவதாக செல்டோஸின் 1.5 லிட்டர் NA (Naturally Aspirated) பெட்ரோல் இன்ஜன் உள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளுமே கிட்டத்தட்ட ஒரே அளவிலாக லிட்டருக்கு 16.5 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின். கியாவின் லைன்-அப்பிலேயே மிகவும் பவர்ஃபுல்லான இன்ஜினாக இதுவே இருக்கிறது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு iMT மற்றும் 7 ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. DCT கியர்பாக்ஸே அதிகபட்சமாக லிட்டருக்கு 17.5 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கிறது. iMT கியர்பாக்ஸானது லிட்டருக்கு 15.6 கிமீ மைலேஜைக் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மைலேஜ் அளவுகள் எல்லாம் ARAI அமைப்பினால் சோதனை செய்யப்பட்ட போது கிடைத்த மைலேஜ் அளவுகளாகும். எனவே தினசரிப் பயன்பாட்டில் இதே அளவு மைலேஜை நாம் எதிர்பார்க்க முடியாது. இதனை விட குறைவான அளவு மைலேஜே கிடைக்கும். இதனை கார்களை ஒப்பிடும் போது ஒரு அளவுகோளாக வேண்டுமானால் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: C செக்மென்ட் எஸ்யூவிக்கள் தினசரிப் பயன்பாட்டிலேயே நல்ல மைலேஜ் தரும் ஒரு எஸ்யூவியாகவே செல்டோஸ் இருந்து வருகிறது. மேற்கூறிய அளவு மைலேஜ் கிடைக்கவில்லை என்றாலும் இந்தக் காரில் நல்ல மைலேஜை நாம் எதிர்பார்க்கலாம். நல்ல மைலேஜ் மட்டுமின்றி நல்ல வசதிகளைக் கொண்ட ஒரு கார் மாடலாகவும் கியா செல்டோஸ் இருந்து வருகிறது.

இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த எஸ்யூவியை விற்பனை செய்து வருகிறது கியா. அடுத்ததாக ஐரோப்பாவிலும் இந்தக் கார் வெளியாகவுள்ளது. பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுவதால் ஹைபிரிட் பவர்ட்ரெயினும் செல்டோஸிற்குக் கிடைக்கிறது. இந்த ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட மாடலை இந்தியாவிலும் வெளியிட கியா திட்டமிட்டு வருகிறது. மேற்கூறிய எரிபொருள் மாடல்களை விட ஹைபிரிட் மாடல் இன்னும் மிகச்சிறப்பான மைலேஜைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Wednesday, April 22, 2026, 23:29 [IST]
English summary
Kia seltos suv all engine arai mileage details out check all the details here
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+