கியா செய்த சிறிய மாற்றங்கள்... பிச்சிக்கும் 20கிமீ மைலேஜ் காரின் விற்பனை! ஏப்ரலில் மட்டும் இத்தனை கஸ்டமர்களா?

கியா செல்டோஸ் (Kia Seltos), இந்தியாவில் கொரியன் கார் நிறுவனமான கியாவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் ஆகும். அதாவது, இந்திய சந்தையில் நுழையலாம் என முடிவு செய்த பிறகு இந்தியாவில் இது நிச்சயமாக வெற்றிப் பெறும் என தீர்க்கமாக முடிவு செய்து கியா அறிமுகப்படுத்திய கார், செல்டோஸ் ஆகும். ஆரம்பத்தில் சிறப்பாக இருந்த செல்டோஸ் கார்கள் விற்பனை கடந்த சில வருடங்களாக சற்று குறைவாகவே பதிவாகி வந்தது.

இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்தே செல்டோஸின் விற்பனை மீண்டும் அதிகமாக பதிவாக ஆரம்பித்தது. எந்த அளவிற்கு என்றால், 2025ஆம் ஆண்டின் கடைசி இரு மாதங்களில் முறையே 6,305 மற்றும் 4,369 செல்டோஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு துவங்கியதுமே முதல் மாதத்திலேயே வழக்கத்தை விட டபுள் மடங்கு அதிகமாக 10 ஆயிரத்து 639 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

kia seltos sales report april 2026

இது அதன்பின் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் தொடர்ந்தது. பிப்ரவரியில் 10,308 செல்டோஸ் கார்களும், மார்ச்சில் 11,041 செல்டோஸ் கார்களும் விற்பனையாகின. இது நடந்து முடிந்த கடந்த 2026 ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில் 10 ஆயிரத்து 566 செல்டோஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டில் இதே ஏப்ரல் மாதத்தில் வெறும் 6 ஆயிரத்து 135 செல்டோஸ் கார்களை மட்டுமே கியா விற்பனை செய்திருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் நடப்பாண்டு ஏப்ரலில் செல்டோஸின் விற்பனை சுமார் 72%, அதாவது 4,431 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

kia seltos sales report april 2026

இருப்பினும், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் 475 யூனிட் செல்டோஸ் கார்கள் குறைவாக விற்பனையாகி உள்ளன. மார்ச்சை காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் குறைவு என்பதால் இந்த வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம். மற்றப்படி, செல்டோஸ் கார்களின் விற்பனையில் எந்த குறைவும் ஏற்பட்டுள்ளதுபோல் தெரியவில்லை.

செல்டோஸ் கார்களின் விற்பனை திடீரென 2026ஆம் ஆண்டில் இருந்து அதிகரித்து இருப்பதற்கு காரணம், ஜனவரி 2ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட புதிய 2ஆம் தலைமுறை கியா செல்டோஸ் ஆகும். கியாவின் புதிய கே3 (K3) பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட புதிய செல்டோஸ் கார் தோற்றத்திலும், உட்புற கேபினின் அம்சங்களிலும் அப்கிரேட் செய்யப்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலமாக, முன்பை விட நீளமானதாகவும், உயரமானதாகவும் புதிய செல்டோஸ் விளங்குகிறது. காரின் முன்பக்கத்தில் புலி-மூக்கு வடிவிலான க்ரில்லின் டிசைன் திருத்தியமைக்கப்பட்டு, முன்பக்க எல்இடி விளக்குகளும் புதியதாக வழங்கப்பட்டன. அத்துடன், காரின் பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லைட்கள் இரண்டும் புதுமையாக எல்இடி லைட் பார் மூலமாக இணைக்கப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கியா செல்டோஸ் கார் 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஷ் டெஸ்ட்டில் முழு 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இதுவும் வாடிக்கையாளர்களை ஈர்த்ததற்கு முக்கிய காரணம் என்றாலும், உடனடியாக மீண்டும் செல்டோஸ் காருக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்ததற்கு ஜனவரி துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை அப்கிரேட் தான் பிரதானமான காரணம் ஆகும்.

புதிய செல்டோஸ் காரில் அடுத்ததாக ஜிடிஎக்ஸ் (ஆப்ஷ்னல்) (GTX (O)), எக்ஸ்-லைன் (ஆப்ஷ்னல்) (X-Line (O)) என இரு விலைமிக்க டாப் வேரியண்ட்கள் புதியதாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த புதிய டாப் வேரியண்ட்களின் அறிமுகம் இந்த மே அல்லது ஜூன் மாதத்தில் இருக்கலாம். அவற்றின் அறிமுகத்திற்கு பின் செல்டோஸின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

Article Published On: Sunday, May 10, 2026, 23:59 [IST]
English summary
Kia seltos suv car sales report april 2026 check all details here
மேலும்... #kia motors #kia seltos #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+