கம்மி விலை தான்! கியா செல்டோஸ் எல்லா வேரியன்ட் விலையும் இது தான்!
கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரை தற்போது அப்டேட் செய்து விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் 4 முக்கியமான வேரியன்ட்களில் 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் ஒவ்வொர வேரியன்ட்டின் விலை விபரங்களை அடுத்தடுத்து காண்போம்.
கியா செல்டோஸ் காரில் முதல் இன்ஜின் ஆப்ஷனான் ஸ்மார்ட் ஸ்டிரீம் ஜி1.5 இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டதில் எச்டிஇ வேரியன்ட் ரூ10.99 லட்சம் என்ற விலையிலும், எச்டிஇ(ஓ) வேரியன்ட் ரூ12.09 லட்சம் என்ற விலையிலும், எச்டிகே வேரியன்ட் ரூ13.09 லட்சம் என்ற விலையிலும், எச்டிகே (ஓ) வேரியன்ட் ரூ14.19 லட்சம் என்ற விலையிலும், எச்டிஎக்ஸ் வேரியன்ட் ரூ15.59 லட்சம் என்ற விலையிலும், எச்டிஎக்ஸ் (_ஏ)
ரூ16.69 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

ஸ்மார்ட் ஸ்டிரீம் ஜி 1.5 டி-ஜிடிஐ இன்ஜின் 7 டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் எச்டிஎக்ஸ் வேரியன்ட் ரூ16.29 லட்சம் என்ற விலையிலும், எச்டிஎக்ஸ் (ஏ) வேரியன்ட் ரூ17.69 லட்சம் என்ற விலையிலும், ஜிடிஎக்ஸ் வேரியன்ட் ரூ18.79 லட்சம் என்ற விலையிலும், ஜிடிஎக்ஸ் (ஏ) வேரியன்ட் ரூ19.19 லட்சம் என்ற விலையிலும், எக்ஸ் லைன் (ஏ) வேரியன்ட் ரூ19.99 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

1.5 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸில் எச்டிஇ வேரியன்ட் ரூ12.59 லட்சம் என்ற விலையிலும், எச்டிஇ (ஓ) வேரியன்ட் ரூ13.69 லட்சம் என்ற விலையிலும், எச்டிகே வேரியன்ட் ரூ14.69 லட்சம் என்ற விலையிலும், எச்டிகே (ஓ) வேரியன்ட் ரூ15.79 லட்சம் என்ற விலையிலும், எச்டிஎக்ஸ் வேரியன்ட் ரூ17.19 லட்சம் என்ற விலையிலும், எச்டிஎக்ஸ் (ஏ) வேரியன்ட் ரூ18.29 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
1.5 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி இன்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட எச்டிகே வேரியன்ட் ரூ14.99 லட்சத்திலும், எச்டிகே (ஓ) ரூ15.99 லட்சம் என்ற விலையிலும், எச்டிஎக்ஸ் வேரியன்ட் ரூ17.09 லட்சம் என்ற விலையிலும், எச்டிஎக்ஸ் (ஏ) வேரியன்ட் ரூ ரூ18.49 லட்சம் என்ற விலையிலும், ஜிடிஎக்ஸ் வேரியன்ட் ரூ19.59 லட்சம் என்ற விலையிலும், ஜிடிஎக்ஸ் (ஏ) வேரியன்ட் ரூ19.79 லட்சம் என்ற விலையிலும், எக்ஸ்-லைன் (ஏ) வேரியன்ட் ரூ19.99 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் காருக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டு வருகிறது. இந்த கார் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ள நிலையில் முழு வேரியன்டிற்கான விலை பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் உங்களுக்கு பிடித்த வேரியன்டை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









