தமிழ்நாடே வேணாம்னு தலைதெறிக்க ஓடிய நிறுவனம் இப்ப மாஸ் காட்டுது! ஆந்திராவுக்கு எங்கயோ மச்சம் இருக்குயா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்த 3வது கார் இது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் கியா கார்னிவல் (Kia Carnival) ஆகிய கார்களை தொடர்ந்து, இந்திய சந்தையில் தனது 3வது தயாரிப்பாக கியா சொனெட் காரை கியா களமிறக்கியது. கியா சொனெட் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 5 வருடங்கள் மற்றும் 4 மாதங்கள் மட்டுமே கடந்துள்ளன.

இது கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும். ஆனால் அதற்குள்ளாகவே விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை கியா நிறுவனம் கடந்துள்ளது. இந்தியாவில் 5 லட்சம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும்.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 5 வருடங்கள் மற்றும் 4 மாதங்கள் மட்டுமே கடந்திருக்கும் சூழலில், அதற்குள்ளாகவே அரை மில்லியன், அதாவது 5 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மிக பிரம்மாண்டமான மைல்கல்லை கடந்து, கியா சொனெட் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இத்தனைக்கும் இது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதவிர இந்தியாவில் இருந்து 70க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளுக்கு, 1 லட்சத்திற்கும் அதிகமான கியா சொனெட் கார்கள் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. கியா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 7.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனை செய்யும் மிகவும் விலை குறைவான கார் என்ற பெருமையை கியா சொனெட் தன்வசம் வைத்துள்ளது.
கியா நிறுவனத்தின் விலை குறைவான காராக இருந்தாலும் கூட, லெவல் 1 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), எலெக்ட்ரிக் சன்ரூஃப், ப்ளைண்ட் வியூ மானிட்டர் உடன் 360 டிகிரி கேமரா மற்றும் 70க்கும் மேற்பட்ட கனெக்ட்டட் கார் வசதிகள் உடன் கூடிய கியா கனெக்ட் தொழில்நுட்பம் போன்ற வசதிகளை எல்லாம் கியா சொனெட் கொண்டுள்ளது.
கியா நிறுவனத்தின் தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை அமைக்க கியா நிறுவனம் முதலில் தமிழ்நாட்டைதான் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அதிகப்படியான அளவு லஞ்சம் கேட்டதால்தான், கியா நிறுவனத்தின் தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சென்று விட்டதாக அந்த சமயத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற தளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், கியா சொனெட் விற்பனையில் சாதனைகளை படைத்து வருகிறது. இது இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








