மாருதி காரை விட மிகவும் குறைவான விலையில் தென் கொரிய நிறுவனத்தின் கார்! ஷோரும்ல கூட்டம் அலை மோதிகிட்டு இருக்கு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10,537 கியா சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 31 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரலில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எஸ்யூவிகளின் பட்டியலில் (Top 10 SUVs April 2026), கியா சொனெட் 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 9 இடங்களில் முறையே டாடா பன்ச், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ், டாடா நெக்ஸான், ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, மாருதி சுஸுகி விக்டோரிஸ், ஹூண்டாய் வெனியூ மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்கள் உள்ளன.
இந்த வரிசையில் கியா சொனெட் கார் 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 7.32 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது கியா சொனெட் காரின் மிக முக்கியமான போட்டி மாடல்களை விட குறைவான விலை ஆகும்.

அதாவது கியா சொனெட் காரின் நேரடி போட்டி மாடலான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) காரின் ஆரம்ப விலை 8.26 லட்ச ரூபாயாக உள்ளது. மறுபக்கம் கியா சொனெட் காரின் மற்றொரு நேரடி போட்டி மாடலான ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ மட்டுமல்லாது, டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), ரெனால்ட் கைகர் (Renault Kiger), நிஸான் மேக்னைட் (Nissan Magnite), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற கார்களுக்கும், கியா சொனெட் கார் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சொனெட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களை கியா சொனெட் கார் கொண்டுள்ளது. 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதால், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் கியா சொனெட் காரால் கவர முடிகிறது.
அத்துடன் கியா சொனெட் காரில், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், பாஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் என ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான், இந்திய சந்தையில் கியா சொனெட் காரை மிகவும் வெற்றிகரமான கார்களில் ஒன்றாக மாற்றியுள்ளன.


Click it and Unblock the Notifications