கொரியாகாரன் மாருதி, டாடாவை கதற விட்டுட்டு இருக்கான்... ஜனவரியில் பெரிய சம்பவமே நடந்திருக்கு...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்தின் தயாரிப்பான சொனெட் காரின் நடப்பு 2026ம் ஆண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம், 10,998 கியா சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 7,194 கியா சொனெட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 3,804 கியா சொனெட் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Kia Sonet Side Design

இதன் மூலம் கியா சொனெட் கார் விற்பனையில் 52.88 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7,30,138 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

கியா சொனெட் காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் (Safety Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Kia Sonet

அத்துடன் பிளைண்ட் வியூ மானிட்டர், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், அனைத்து இருக்கைகளுக்கும் ரிமைண்டர் உடன் 3 பாயிண்ட் சீட்பெல்ட், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளும் கியா சொனெட் காரில் வழங்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில் 1.0 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options), கியா சொனெட் கார் கொண்டுள்ளது. அத்துடன் கியா சொனெட் காரில் பயணிகளின் சௌகரியத்திற்காக ஏராளமான அதிநவீன வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதில், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர், பாஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், எல்இடி ஆம்பியண்ட் லைட்டிங், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Breeza), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற கார்களுக்கு எல்லாம், கியா சொனெட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

அத்துடன் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகியவற்றுக்கும் கூட, கியா சொனெட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்தான். மிகவும் குறைவான விலையில் ஒரு கியா நிறுவனத்தின் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, சொனெட் நல்ல ஆப்ஷன் என்பது எங்களுடைய கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 3, 2026, 23:19 [IST]
English summary
Kia sonet sales report january 2026 52 88 per cent growth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+