கியா சோனெட் எஸ்யூவி புதிய அப்டேட்.. நல்ல இடவதியுடன்.. கூடுதல் வசதிகளுடன்.. விரைவில் வெளியீடு!

கியா இந்தியாவில் விற்பனை செய்து வரும் இரண்டு சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களுள் ஒன்று சோனெட் (Sonet). நல்ல விற்பனையைப் பதிவு செய்து வரும் எஸ்யூவிக்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. கடந்த மே மாதம் சுமார் 9,000 யூனிட்டுகள் என்ற விற்பனையைப் பதிவு செய்துள்ளது சோனெட். இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியை அடுத்த தலைமுறைக்கு அப்டேட் செய்யவிருக்கிறது கியா.

முற்றிலும் புதிய பிளாக்ஃபார்ம், மேம்பட்ட வசதிகள், கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் புதிய டிசைன் என 360 டிகிரியிலும் சோனெட் எஸ்யூவியை அப்டேட் செய்ய கியா திட்டமிட்டிருக்கிறது. இந்தாண்டு தொடக்கத்தில் தான் மேம்படுத்தப்பட்ட புதிய இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலை வெளியிட்டது கியா. முன்னர் விற்பனையில் இருந்த காருடன் ஒப்பிடும் போது, சற்று பெரிய, நல்ல இடவசதி கொண்ட ப்ரீமியமான காராக புதிய செல்டோஸ் இருந்தது.

Kia Sonet

அதனைப் போலவே சோனெட்டுக்கும் ப்ரீமியமான அப்கிரேடாக இந்த புதிய தலைமுறை அப்கிரேடு இருக்கும் எனத் தெரிகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், சோனெட்டை இன்னும் பாதுகாப்பான காராகவும் கியா அப்கிரேடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியாவின் மற்றொரு சப்-காம்பேக்ட் எஸ்யூவியான சிராஸ் உருவாக்கப்பட்ட அதே K1 பிளாட்ஃபார்மையே சோனெட்டுக்கும் பயன்படுத்தவிருக்கிறது கியா. சிராஸ் பாரத் NCAP பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது.

எனவே புதிய சோனெட்டும் 5 ஸ்டார் ரேட்டிங் பெறும் வகையிலேயே உருவாக்கப்படும் எனத் தெரிகிறது. சமீபத்தில் குளோபல் NCAP பாதுகாப்பு தரச்சோதனையில் சோனெட் 1 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருந்தது. ஆனால் அது ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக இந்தியாவில் கியா தயாரித்த காராகும். அதில் இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதோடு, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் வசதி கூட கொடுக்கப்படவில்லை.

Kia Sonet Inside

எனவே அந்த பாதுகாப்பு ரேட்டிங் இந்திய சோனெட் மாடலுக்குப் பொருந்தாது. இந்தியாவில் 6 ஏர்பேக்குகளுடன், எலெக்ட்ரிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் வசதியினையும் அனைத்து வேரியன்ட்களிலும் கியா ஸ்டாண்டர்டாகக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அப்டேட் செய்யப்படும் சோனெட்டில் இன்னும் கூடுதலான மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளும் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய சோனெட்டிற்கு கியா பயன்படுத்தவிருக்கும் K1 பிளாட்ஃபார்மானது, தற்போது சோனெட் கொண்டிருக்கும் பிளாட்ஃபார்மை விட சற்று நீளமான வீல்பேஸைக் கொண்டது. இதனால் இரண்டாம் வரிசை இருக்கையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் இடவசதியை நாம் எதிர்பார்க்கலாம். சிராஸ் எஸ்யூவியிலும் இரண்டாம் வரிசை இருக்கையை சொகுசாக்குவதற்காக நிறையவே மெனக்கெட்டிருந்தது கியா.

புதிய காரின் பவர்ட்ரெயின் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் 1.2 லிட்டர், NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளே அப்படியே கடத்தப்படவிருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைய நிலையில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவு மிகவும் முக்கியமான ஒன்றாகும். கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக விற்பனையைக் கொடுக்கும் பிரிவுகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது. இதனாலேயே சோனெட்டுடன், சிராஸ் என்ற புதிய எஸ்யூவியையும் இந்தப் பிரிவில் கடந்தாண்டு வெளியிட்டது கியா. ஆனால் சிராஸ் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.

தொடக்கத்தில் சிராஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், தொடர்ந்து அதன் விற்பனை குறைந்து தற்போது 1000 யூனிட்டுகளுக்கும் கீழாவே விற்பனையாகி வருகிறது. சோனெட் எஸ்யூவியின் விற்பனை அளவில் 10 சதவீதம் தான். இந்த தோல்வியினால் சோனெட்டை முடிந்த அளவிற்கு வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான ஒன்றாக மாற்றுவதோடு, தற்போது அதில் வாடிக்கையாளர்கள் கூறி வரும் பிரச்சினைகளையும் களைய கியா முயற்சி செய்து வருவதாகவே தெரிகிறது.

இந்திய வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வகையிலான மாற்றங்கள், மேம்பாடுகள் மற்றும் புதிய அம்சங்களுடன், 2027ல் சோனெட் சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை மாடலின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு சோனெட்டின் விற்பனை 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. எனவே புதிய அப்டேட் இதன் விற்பனையை மேலும் உயர்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, June 12, 2026, 11:59 [IST]
English summary
Kia sonet to be updated with new features and more space inside
மேலும்... #kia #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out