கியா சொரென்டோ 7 சீட்டர் எஸ்யூவிக்கு இந்தியாவில் புக்கிங் துவங்கியது!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் ஹைப்ரிட் எஸ்யூவியை மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதை அதிகாரப்பூர்வமாக இன்று உறுதி செய்துள்ளது. 7 பேர் செல்லும் இருக்கை வசதி கொண்ட இந்த புதிய மாடலின் டீசரை இன்று கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளதுடன், இந்தியாவில் புக்கிங்கையும் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.

கியா நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் முழுமையான தோற்றத்தை காண முடியவில்லை என்றாலும், இது மிகவும் கம்பீரமான தோற்றத்தில் வரும் பிரிமீயம் எஸ்யூவி என்பது பார்க்க முடிகிறது. மேலும், பல வெளிநாடுகளில் இந்த எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. அகலமான பானட், கியா நிறுவனத்தின் தனித்துவமான க்ரில் அமைப்பு ஆகியவை இதன் தோற்றத்திற்கு வலு சேர்க்கும் அம்சங்களாக இருக்கும் என்பதை கூற முடியும்.

Kia Sorento

இந்த புதிய எஸ்யூவியில் கியா நிறுவனத்தின் புதிய தலைமுறை இரண்டு அடுக்கு அமைப்புடைய எல்இடி லைட்டுகள் வடிவமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பது டீசர் மூலமாக தெரிய வருகிறது. மேல்பகுதியில் கூர்மையான எல்இடி பகல்நேர விளக்குகள், கீழ்பாகத்தில் தனித்துவமான எல்இடி லைட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இதனால், சாலைகளில் செல்லும்போது வசீகரமான தோற்றத்துடன் திரும்பி பார்க்க வைக்கும்.

ஏற்கனவே கூறியது போல இந்த எஸ்யூவி பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், உலக அளவில் கியா நிறுவனத்தின் அதிக விற்பனையாகும் டாப்-3 மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2002ல் அறிமுகமான இந்த எஸ்யூவி இதுவரை 132 நாடுகளில் 48 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையை பதிவு செய்துள்ளது. இந்த எஸ்யூவி பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் உலகின் பல உயரிய விருதுகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சொரென்டோ எஸ்யூவி கியா நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய மாடலாக வர இருக்கிறது. இந்த எஸ்யூவியின் தொழில்நுட்ப தகவல்களை இன்று கியா நிறுவனம் அனுப்பி உள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவிக்கவில்லை. ஆனால், இங்கிலாந்து நாட்டில் விற்பனை செய்யப்படும் மாடலில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் அமைப்பு 238எச்பி பவரையும், 380என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதே எஞ்சின் ஹைப்ரிட் அமைப்பு இந்தியாவிலும் வருமா என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.

புதிய கியா சொரென்டோ எஸ்யூவியானது 4,815 மிமீ நீளமும், 1,900 மிமீ அகலமும், 1,700 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. 2,815மிமீ வீல் பேஸ் நீளமும் உடையது. தற்போது வெளியாகி இருக்கும் ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்களின்படி, இந்தியாவில் 5 சீட்டர், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் இந்த கார் வர இருப்பதாக தெரிகிறது.

புதிய கியா சொரென்டோ எஸ்யூவியானது இந்தியாவில் ரூ.50 லட்சத்தையொட்டிய விலையில் பிரிமீயம் ரக மாடலாக நிலைநிறுத்தப்படும். ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வேகன் டைரான், ஹோண்டா இசட்ஆர்வி உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். உலக அளவில் கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கும் இந்த எஸ்யூவி இந்தியாவிலும் தனது வெற்றிப் பயணத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து பா்ரக்கலாம்.

Article Published On: Monday, August 3, 2026, 12:05 [IST]
English summary
Kia sorento hybrid suv india teaser pre bookings open launch soon
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out