டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களமிறங்கும் கியா சொரென்டோ? தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

பிரிமீயம் அம்சங்களுடன் கூடிய எஸ்யூவி மாடல்களால் வாடிக்கையாளர்களை வசியம் செய்த கியா மோட்டார் நிறுவனம் அடுத்து முற்றிலும் பிரிமீயம் ரக எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க ஆயத்தமாகி வருகிறது. வரும் செப்டம்பர் 4ந் தேதி இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் இடையிலான பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடல் 7 பேர் அமரும் இருக்கை வசதியை பெற்றிருக்கும். இதன் மூலம் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரீமியம் எஸ்யூவி சந்தையில் கியா நேரடி போட்டியை உருவாக்க உள்ளது. இந்த புதிய எஸ்யூவி குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.

1. புக்கிங் ஆரம்பம்

கியா சொரென்டோ ஹைபிரிட் எஸ்யூவி மாடலாநது இந்தியாவில் செப்டம்பர் 4ந் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கடந்த ஒரு வாரமாக இதற்கான டீசர்களை கியா நிறுவனம் வெளியிடத் தொடங்கியுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

2. இந்தியாவின் முதல் கியா ஹைபிரிட் கார்

இந்திய சந்தையில் கியா அறிமுகப்படுத்தும் முதல் ஸ்ட்ராங் ஹைபிரிட் வகை 7 சீட்டர் மாடலாக வருகிறது. இதன் மூலம் அதிக மைலேஜ் மற்றும் சிறப்பான செயல்திறன் இரண்டையும் விரும்பும் வாடிக்கையாளர்களை கியா நிறுவனம் குறிவைத்துள்ளது.

3. இருக்கை வசதி

புதிய கியா சொரென்டோ எஸ்யூவியானது ஏற்கனவே விற்பனையில் உள்ள கியா செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் மாடல்களை உயர்ரக மாடல் எஸ்யூவியாக இருக்கும். மூன்று வரிசை இருக்கைகளுடன் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற வசதிகளை வழங்கும்.

Kia Sorento Interior

4. ஹைபிரிட் தொழில்நுட்பம்

சர்வதேச சந்தையில் விற்பனையாகும் மாடலைப் போல, இந்தியாவிலும் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ஸ்ட்ராங் ஹைபிரிட் அமைப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலானது இது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த புதிய ஹைப்ரிட் எஸ்யூவியானது அதிகபட்சமாக 238 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

5. டீசல் தேர்வும் வரலாம்

இந்த செக்மென்ட்டின் லீடராக இருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர்சல் எஞ்சின் தேர்வில் கிடைப்பதால், ந்த மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வையும் கியா இந்தியாவில் அறிமுகப்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்னிவல் பிரிமீயம் எம்பிவி காரில் வழங்கப்படும் இந்த டீசல் எஞ்சின் சொரென்டோவிலும் இடம்படிக்கும் என்று தெரிகிறது. இதன்மூலம் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த தேர்வு கிடைக்கும்.

6. ஆல் வீல் டிரைவ் வசதி

உயர் வேரியண்ட்களில் ஆல்-வீல்-டிரைவ் (AWD) வசதி வழங்கப்படலாம். இது மோசமான சாலை மற்றும் மலைப்பகுதி பயணங்களுக்கு ஏதுவானதாக அமையும் என்று தெரிகிறது.

7. வசதிகளுக்கு குறைவிருக்காது

இரண்டு 12.3 இன்ச் டிஜிட்டல் திரைகள், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், டிஜிட்டல் கீ போன்ற பல பிரீமியம் அம்சங்கள் இதில் இடம்பெறலாம்.

8. லெவல்-2 ADAS பாதுகாப்பு

அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் உள்ளிட்ட Level-2 ADAS பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9. இந்தியாவில் அசெம்பிள்?

முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்து இந்த புதிய எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர கியா திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில் விலையை சவாலாக நிர்ணயிக்க முடியும்.

10. யாருக்கு போட்டி?

இந்தியாவில் யோட்டா ஃபார்ச்சூனர், ஸ்கோடா கோடியாக், ஜீப் மெரிடியன் போன்ற மாடல்களுக்கு கியா சொரென்டோ போட்டியாக இருக்கும். விலை ரூ.40 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 4ந் தேதி விலை அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

இந்தியாவில் ஹைபிரிட் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், சொரென்டோ ஹைபிரிட் கியா நிறுவனத்துக்கு முக்கிய மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிக இடவசதியுடன் 7 பேர் செல்வதற்கான வாய்ப்புடன் அதிக வசதிகளுடன் இந்த புதிய மாடல் வர இருப்பது கியா ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Article Published On: Thursday, August 6, 2026, 12:11 [IST]
English summary
Kia sorento hybrid top 10 things to know ahead india launch
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X