சொரென்டோ 7 சீட்டர் எஸ்யூவியை விரைவில் இந்தியாவில் களமிறக்குகிறது கியா... டீசரும் வெளியீடு!!

கியா சொரென்டோ 7 சீட்டர் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது அதிகாரப்பூர்வமாக இன்று உறுதியாகி உள்ளது. வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற செல்டோஸ் எஸ்யூவியைவிட விலை கூடுதலான பிரிமீயம் எஸ்யூவி ரகத்தில் இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்படும்.

இந்த நிலையில், இன்று கியா இந்தியா நிறுவனம் இந்த புதிய எஸ்யூவி விரைவில் வருவதை உறுதி செய்யும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாடல் இந்தியாவில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்றுதான் அதிகார்ப்பூர்வமாக இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Kia Sorento

புதிய கியா சொரென்டோ எஸ்யூவி 7 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. தற்போது உள்ள கியா கார் மாடல்களிலிருந்து சற்று வேறுபட்ட டிசைன் அம்சங்களுடன் பிரம்மாண்டமாக இருக்கும். எல்இடி ஹெட்லைட்டுகள் மெல்லிய பகல்நேர விளக்குகள், அகலமான க்ரில் அமைப்பு ஆகியவற்றுடன் டிசைனில் கவர்கிறது. ரூஃப் ரெயில்கள், இரட்டை வண்ண அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் ரூஃப் ஸ்பாய்லர் போன்றவற்றுடன் எஸ்யூவிக்குரிய அம்சங்களை பெற்றுள்ளது.

இந்த புதிய எஸ்யூவியானது 4,815 மிமீ நீளமும், 1900மிமீ அகலமும், 1,700 மிமீ உயரமும் கொண்டதாகவும், 2,185 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றுள்ளது. நேரடி போட்டியாளரான ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியைவிட 23 மிமீ நீளம் கூடுதலாக இருப்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக கூறலாம். இந்த கார் வெளிநாடுகளில் 5,6 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் 6 அல்லது 7 சீட்டர் மாடல்களில் வரலாம்.

இந்த புதிய மாடலில் 12.3 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

Kia Sorento Interior

இந்த கார் வெளிநாடுகளில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 238 எச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. எஞ்சின் சக்தியை அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும், முன்சக்கரங்களுக்கு மடடுமே செல்லும் ஃப்ரண்ட் வீல் டிரைவ் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவிலும் இதே தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிக்குமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை இல்லை.

Kia Sorento Rear Profile

புதிய கியா சொரென்டோ எஸ்யூவி பிரிமீயம் ரகத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த கார் முக்கிய பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சம் இடையிலான விலையில் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி மெஜஸ்ட்டர், ஜீப் மெரிடியன், ஹோண்டா இசட்ஆர்வி, ஸ்கோடா கோடியாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Article Published On: Thursday, July 30, 2026, 15:32 [IST]
English summary
Kia sorento india launch teaser new design features suv
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X